அதிமுகவினுடைய முன்னாள் ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சராக மூன்று முறை இருந்தவருமான ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் இன்னும் சற்று நேரத்தில் திமுகவில் தன்னை இணைத்துக் கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே அதிமுகவில் மூன்று முறை பல்வேறு காலகட்டங்களில் அவர் முதலமைச்சராக இருந்திருக்கிறார். அதிமுகவினுடைய உயரிய பதவியாக இருக்கக்கூடிய பொதுச்செயலாளருக்கு நிகராக ஒருங்கிணைப்பாளர் என்ற ஒரு பதவியை உருவாக்கி அந்த ஒருங்கிணைப்பாளர் பதவியிலும் இருந்திருக்கிறார். ஆனால் மீண்டும் அதிமுகவின் பொதுச்செயலாளராக வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் நினைத்ததால் இருவருக்கும் இடையே பனிப்போர் வெடித்தது.
ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வந்த நிலையில், பொதுச்செயலாளர் பதவியை அதிமுகவில் மீண்டும் உருவாக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி நினைத்தார். ஆனால் அதற்கு ஓ.பன்னீர்செல்வம் ஒப்புக்கொள்ளவில்லை. இதனையடுத்து நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு, ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.
அதற்கு முன்னதாக பொதுக்குழுவின் போது ஓபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்னுடைய ஆதரவாளர்கள் கலந்து கொள்ளாத நிலையில் கிட்டத்தட்ட நீதிமன்றம் சென்று அவர் தீர்ப்பு வாங்கி நாங்கள் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அந்த வழக்கின் அடிப்படையில் கொடுத்த தீர்ப்பின் அடிப்படையில் கலந்து கொண்டார். அங்கு பாதியிலே அவர் வெளியேற்றப்பட்டார். கடுமையாக விமர்சனங்களும், திட்டியும், கேவலமாக பேசியும் அவரை வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து வானகரத்தில் அதிமுக சார்பில் நடைபெற்று பொதுக்கூட்டத்தில் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அங்கு நடந்த ஒரு வன்முறை ஆட்டம் மற்றும் அசம்பாவிதங்களின் அடிப்படையில் அடிப்படையில் ஓபிஎஸ் உள்ளிட்ட பல பேர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அந்த பொதுக்குழுவிலே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்த தீர்மானத்தைக் கொண்டே ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையும் படிங்க: #BREAKING அதிரும் அரசியல் களம்... எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறார் ஓபிஎஸ்?... இன்றே திமுகவில் ஐக்கியம்...!!
அதன்பின்னரும் கூட தொடர்ச்சியாக ஓபிஎஸ் அதிமுக கொடியணிந்த காரிலும் அதிமுக வண்ணங்கள் பொருத்திய வேட்டியும் கட்டியிருந்தார். அதையும் நீதிமன்றத்திற்கு சென்று கட்சிக்கு சம்பந்தமில்லாத ஒருத்தர் எங்களுடைய கட்சி கொடியை பயன்படுத்துகிறார் எங்களுடைய கட்சியினுடைய கரைவேட்டியை பயன்படுத்துகிறார் என்று அதற்கும் தடையாணை வாங்கியது எடப்பாடி தரப்பு. இத்தனை அவமானங்களுக்கு இடையிலும் ஓபிஎஸ் பாஜகவை பெரிய அளவு நம்பி கொண்டிருந்தார். பாஜக தனக்கான பதவியை அதிமுகவில் வாங்கி கொடுத்துவிடும் என்ற நம்பிக்கையில், 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தார். ராமநாபுரம் தொகுதியில் இரண்டாம் இடம் பெற்றார். ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பாகவே எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடனான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், ஓபிஎஸை பாஜக பெரிய அளவிற்கு கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் ஓபிஎஸ் பல்வேறு காலகட்டங்களில் தொடர்ச்சியாக முயற்சித்து வந்தார். அதுமட்டுமல்ல அமிஷா மோடி போன்றவர்களையும் சந்திக்க முயற்சித்தார். ஆனால் அந்த சந்திப்புக்கு அனுமதியும் கிடைக்கவில்லை. அப்படியே சந்தித்தாலும் இதுகுறித்து பேசுவதற்கும் அவர் அனுமதிக்கப்படவில்லை. எனவே அரசியலில் தனித்து விடப்பட்டார் அவருடைய ஆதரவாளராக இருக்க அண்ணாமலை கூட தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸை இணைத்து விடலாம் என்று பல்வேறு வடிவங்களில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
ஆனால் அதுவும் எதுவும் பலனளிக்கவில்லை. ஓபிஎஸ் பெரிய அளவிற்கு பாஜகவை நம்பி கொண்டிருந்தார். நயினார் நாகேந்திரன் தலைவரான பிறகு ஓபிஎஸை கண்டுகொள்ளவில்லை. அதுமட்டுமல்ல அண்ணாமலையோடு நெருக்கமாக இருந்த தினகரன், சசிகலா உள்ளிட்டவரையும் நயினார் கண்டு கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல தொடர்ச்சியாக அரசியல் களத்தில் தனக்கு போட்டியாகவும் வந்துவிடுவார் என்ற அடிப்படையிலே ஒரே சமூகம் என்ற அடிப்படையிலும் அவர் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அண்ணாமலை அவ்வப்போது ஓபிஎஸும், தினகரனும் தேசிய ஜனநாயக கூட்டில் இணைய வேண்டும் என வலியுறுத்தி வந்தார். ஏனெனில் 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது ஓபிஎஸ், டிடிவி தினகரனை கூட்டணிக்குள் இணைந்த பெரும் பங்கு அண்ணாமலையையே சாரும்.
ஆனால் பாஜகவும் அதிமுகவும் கூட்டணியில் இணைந்த பிறகு, ஓபிஎஸுக்கு அதிமுகவில் அவருக்கான இடம் கிடைக்கவில்லை. வெற்றிடம் தான் கிடைத்தது. எத்தனையோ முறை பாஜக தலைவரை சந்தித்து தன்னுடைய கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் எதுவும் பாஜக தலைவர்கள் செவி சாய்க்கவில்லை. அதன் மட்டுமல்ல தமிழ்நாடு அரசில் தனித்து விடப்பட்டார். இந்நிலையில் அவர் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு கட்சிகளுக்கு செல்ல இருப்பதாக தகவல் வந்தது. ஒரு பக்கம் பாஜகவில் இணைய உள்ளதாக கூட கூறப்பட்டது. பாஜகவில் இருக்கக்கூடிய மூத்த தலைவர்கள் எல்லாம் ஓபிஎஸக்கு நெருக்கமாக இருக்கிறார்கள். எனவே பாஜாக்காவில் அவர் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்று ஒரு பேச்சு இருந்தது. ஆனால் அப்போது கூட அதிமுகவில் தன்னை இணைப்பது ஒன்று தான் சரியான தீர்வு என உறுதியாக நம்பினார்.
எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்லவே வெட்கப்படுகிறேன் எனக்கூறி வந்த ஓபிஎஸ், கடைசியாக நடந்த கூட்டத்தில் கூட “அண்ணன் இபிஎஸ்” எனக்கூறி தூதுவிட்டார். ஒருகட்டத்தில் வெளிப்படையாகவே மீண்டும் அழைப்பு விடுத்தால் அதிமுகவில் இணையத் தயார் என்றெல்லாம் ஓபனாக கோரிக்கை விடுத்தார். ஆனால் தனது அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில் இன்று திமுகவில் ஓ.பி.எஸ் ஐக்கியமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: WAIT & SEE..!! OPS, சசிகலா நிச்சயமா NDA கூட்டணிக்கு வருவாங்க..! TTV தினகரன் திட்டவட்டம்..!!