முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணையக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் தலைமை செயலகம் சென்று தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல் முதலமைச்சர் இன்று கோவைக்கு பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். முதலமைச்சர் கோவை புறப்படுவதற்கு முன்பாகவே காலை 9 மணி அளவிலே ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சரை சென்று சந்தித்து திமுகவில் இணையவதற்கான ஒரு பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது.
ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை அதிமுகவினுடைய முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்து வந்தார். ஓ.பன்னீர்செல்வம் மீது அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்த பிறகு தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்கின்ற அமைப்பை தொடங்கி செயல்பட்டு வருகின்றார். இந்த நிலையில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் தொடர்ந்து நேற்று இரவு கிட்டத்தட்ட ஒரு மணி வரை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த ஓ.பன்னீர்செல்வம் இந்த இறுதி முடிவிற்கு வந்திருப்பதாக தெரிய வந்திருக்கின்றது.
அதன் அடிப்படையிலே திமுகவில் இணையலாம் என்கின்ற முடிவை அவர் எடுத்திருக்கக்கூடிய நிலையில் தான் இன்று காலையே அவர் தலைமை செயலகம் சென்று தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும், அதன் தொடர்ச்சியாக திமுகவில் இணையக்கூடிய வகையிலே முதலமைச்சரை சென்று சந்திக்க இருப்பதாகவும் தெரிய வந்திருக்கின்றது. முதலமைச்சர் கோவை புறப்படுவதற்கு முன்பாகவே இன்று காலை இந்த சந்திப்பு நிகழலாம் என்று கூறப்பட்டிருக்கின்றது.
இதையும் படிங்க: WAIT & SEE..!! OPS, சசிகலா நிச்சயமா NDA கூட்டணிக்கு வருவாங்க..! TTV தினகரன் திட்டவட்டம்..!!
அதன் பிறகு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் எத்தனை சட்டப்பேரவை தொகுதியில் திமுக சின்னத்தில் அல்லது சுயேட்சை சின்னத்தில்போட்டியிடக்கூடும் எனக்கூறப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணையக்கூடிய பட்சத்திலே அவர் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவதற்கான ஒரு வாய்ப்பும் இருக்கின்றது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்கள் போட்டியிடக்கூடிய வகையில் திமுகவிலே மூன்று தொகுதிகள் அவர்களுக்கு வழங்கப்படும் என்ற தகவலும் சொல்லப்பட்டிருக்கின்றது.
ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து அவரது ஆதரவாளரான உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பனும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ஜெ. கேட்டதும் பதவியை திருப்பிக் கொடுத்தேன்... அதிமுகவுக்கு சோதனை காலம்... OPS பிரஸ் மீட்..!!