திண்டுக்கல் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று வருகை தந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராணிப்பேட்டையில் 60 வயது மூதாட்டியை 23 வயது வாலிபர் கஞ்சா போதையில் பாலியல் வன்கிழமை செய்துள்ளார் சம்பவங்கள் அனைத்தும் நடைபெறுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.
ஆட்சியை குறை சொல்லும் நோக்கம் எங்களுக்கு கிடையாது. நடக்கக்கூடிய தவறுகளை சுட்டிக் காட்டுவது தான் எதிர்க்கட்சி உண்மையான ஜனநாயக கடமை. தமிழக வெற்றிக்கழக கட்சியினர் செய்து வருகின்றனர். ஆனால் அவர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இதையும் படிங்க: "காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்"..! ஆளுநரிடம் புகார்... நயினாரை கண்டித்த மாணிக்கம் தாகூர்..!!
அமைச்சர் விஸ்வநாதன் மாணவியிடம் நடந்து கொண்ட சம்பவம் எந்த விதத்தில் நியாயமானது. இன்னொரு அமைச்சர் மாத்திரையை நுணுக்குகிறேன் என்று சொல்கிறார். ஆனால் அங்கு குழந்தையே கிடையாது
தமிழகத்தில் குதிரை பேரம் நடைபெறுகிறது என்பது உண்மை தன்னுடைய ஆட்சிக்கு மெஜாரிட்டியை காண்பிக்க வேண்டும் என்பதற்காக குதிரை பேரும் பேசுவதை முன்னெடுத்துள்ளனர்.
ஒருவர் தவறு செய்தால் தவறு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னால் அதை மாணிக்கம் தாகூர் கண்டனம் என அறிவித்தால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். அவர் வீட்டில் பெண்கள் இருக்கிறார்கள் எல்லோர் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள். இதையெல்லாம் கண்டிக்கணும் என்று சொன்னால் இது கண்டனத்திற்குரியது என்று சொன்னால், அந்த கட்சி எப்படிப்பட்ட கட்சியாக இருக்கும் அவர்களது பார்வை சரி இல்லை
167-வது பிரிவின்படி மத்திய அரசின் திட்டங்கள் மத்திய அரசின் அலுவலகங்கள் அலுவல் சார்ந்த பணியில் ஆயுட்க ஆய்வு செய்வதற்கு காரணம் இருக்கு அனுமதி உள்ளது இது கூட நிர்மல் குமாருக்கு தெரியவில்லை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம் நீதிபதி சொல்லி இருக்கிறார் இவர் சட்டம் படித்தவர் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை என்று சொன்னால் இவரெல்லாம் எப்படி சட்டத்துறை அமைச்சராக இருக்க முடியும்
தமிழகம் முழுவதும் அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிக்காக 5 லட்சம் முதல் 50 லட்சம் வரை லஞ்சம் பேசப்படுவதாக நீதிமன்றத்தில் கூட இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது
எனசெய்தியாளர்களிடம் தெரிவித்தார்
இதையும் படிங்க: ரொம்ப பேசாதீங்க அண்ணாச்சி-னு சொன்னனே.! கேட்டீங்களா..? EX. அமைச்சர் கைது... மாணிக்கம் தாகூர் விமர்சனம்..!