2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு இரு கட்சிகளும் இணைந்துள்ளன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவின் அவல நிலைகளை எடுத்துக் கூறுவதற்காகவும் அதிமுக சாதனைகளை எடுத்துரைப்பதற்காகவும் தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பாகவே சுற்றுப்பயணத்தை தொடங்கிவிட்டார். பூத் கமிட்டி கூட்டங்கள், ஆலோசனைக் கூட்டங்கள், பொதுக்குழு கூட்டங்கள் என கட்சியை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.
திமுகவும் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் வீடு வீடாகச் சென்று திமுகவின் சாதனைகளை எடுத்துக் கூறி உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகின்றனர். அது மட்டும் அல்ல அது தனித்தனியாக நிர்வாகிகளை சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதேபோல் பாஜகவையும் பலப்படுத்துவதற்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில் பாஜகவின் பூத் களை வலிமைப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், விருதுநகர் நந்திமரத் தெருவில் பாஜக பூத் கமிட்டி அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்தார்.
அப்போது பூத் கமிட்டி வேலைகள் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்த போது, நயினார் நாகேந்திரனிடம் பாஜக தொண்டர் ஒருவர் பேசினார். அப்போது நான் தேர்தலில் நின்றேன் எனவும் அப்போது உங்களுக்கு சோறு கூட போடுறோம். ஆனால், ஓட்டுப் போட மாட்டோம் என மக்கள் சொல்கிறார்கள் என கூறினார். இதனால் அப்பகுதியில் சிரிப்பலை ஏற்பட்டது. இருப்பினும் வெளிப்படையாக பேசிய தொண்டரால் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.
இதையும் படிங்க: நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மறைவு.. நயினார் நாகேந்திரன் இரங்கல்..!
இதையும் படிங்க: அமித்ஷா டெல்லியில FLIGHT ஏறுனா... தமிழ்நாட்டுல அள்ளு விடுது! நயினார் ஃபயர் ஸ்பீச்