கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கே.கே. நகரைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்ந்து நடைபெற்ற தீவிர விசாரணையில், மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக ஆந்திர துணை நடிகை நாகலட்சுமி, அஞ்சலி, கார்த்திக் குமார் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கட்டுமான நிறுவன ஊழியர் மகேந்திரன் மற்றும் திமுக நிர்வாகி ரமேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தையே கொந்தளிக்க வைத்த இந்த விவகாரத்தில் திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், இரும்புக்கரம் கொண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களை அடக்குவேன் என்று வீரவசனம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே! சென்னை கோயம்பேட்டில் 9 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளிச் சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக திமுக நிர்வாகி உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தியைப் படித்தீர்களா?.
இதையும் படிங்க: பாஜக கூட்டத்தில் இவர்கள் பங்கேற்க கூடாது... மீறினால் அனுமதி ரத்து... நயினார் தலையில் இறங்கியது பேரிடி...!
அண்ணா பல்கலைக்கழக மாணவியைப் பாலியல் வன்புணர்வு செய்த ஞானசேகரன், அரக்கோணம் கல்லூரி மாணவியைக் கட்டாயப்படுத்தி திருமணம் புரிந்து கொடுமை செய்த தெய்வச்செயல், தற்போது 15 வயது சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ரமேஷ் என பெண்கள் பாதுகாப்பை அச்சுறுத்தும் கயவர்கள் தொடர்ந்து திமுகவினராகவே இருப்பது ஏன்?.
"திமுககாரன்" எனும் ஒற்றை அடையாளமே பெண்களையும் சிறுமிகளையும் சிதைப்பதற்கு திராவிட மாடல் ஆட்சியில் வழங்கப்பட்ட தகுதியா? திமுகவின் மூத்த அமைச்சர்களே சிறிதும் நாகரிகமின்றி பெண்களைத் தரக்குறைவாக விமர்சித்து வசைபாடும் போது கழகக் கண்மணிகள் பெண்களின் பாதுகாப்பைக் களவாடுவதில் ஆச்சரியமில்லையோ? Out of control-இல் இயங்கும் அறிவாலயம் உடன்பிறப்புகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்குத் திறனில்லாத இந்த ஆட்சிதான் பொற்கால ஆட்சியா? வெட்கக்கேடு! எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அதிரும் அரசியல் களம்... அங்கிட்டு நயினார்... இங்கிட்டு இபிஎஸ்... அனல் பறக்கும் ஆலோசனைகள்...!