நாகர்கோவில் சட்டசபைத் தொகுதி பா.ஜ. எம்.எல்.ஏ. காந்திக்கு வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் சீட் கிடைக்க வாய்ப்பு மிகவும் குறைவு என தகவல்கள் வெளியாகியுள்ளன. 80 வயதான காந்தி, தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்த நிலையில், கட்சியின் மாநிலத் தலைமை அவருக்கு பதிலாக புதுமுகத்தை களமிறக்க தீவிரம் காட்டி வருகிறது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனை தோற்கடித்து பா.ஜ.வுக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுத் தந்தவர் காந்தி. எனினும் வயது முதிர்ச்சியை காரணம் காட்டி அவரை ஓரம் கட்டும் முயற்சி கட்சியில் தீவிரமாக நடைபெற்று வருவதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
காந்தியின் ஆதரவாளர்கள் கூறுகையில், “எங்கள் தலைவருக்கு பிரதமர் மோடியிடம் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. டெல்லியில் உள்ள பல முக்கிய பா.ஜ. தலைவர்களுடன் நெருக்கமும் கொண்டவர்.
இதையும் படிங்க: கழுத்தறுத்த பாஜக! கம்பி நீட்ட தயாராகும் சரத்குமார்! மீண்டும் உதயமாகிறதா சமத்துவ மக்கள் கட்சி?!

இந்த முறை சீட் கிடைக்காது என தெரிந்ததும் டெல்லி சென்று மேலிடத் தலைவர்களை சந்தித்து தனது நிலையை விளக்க முயற்சித்தார். ஆனால் அவரை சந்திக்கவே அனுமதி அளிக்கப்படவில்லை” என்று வருத்தம் தெரிவித்தனர்.
மேலும், “நாகர்கோவில் தொகுதியை அதிமுகவுக்கு விட்டுக்கொடுக்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. காந்தி போட்டியிட்டால்தான் இங்கு பா.ஜ.வால் வெற்றி பெற முடியும் என்பது உண்மை. ஆனால் கட்சி அதை புரிந்துகொள்ளவில்லை” என்றும் அவர்கள் கூறினர்.
காந்தி தரப்பினர், அவருக்கு சீட் மறுக்கப்பட்டால் அது பா.ஜ.வுக்கு பெரும் இழப்பாக அமையும் என்று எச்சரித்துள்ளனர். நாகர்கோவில் தொகுதி பா.ஜ.வின் ஒரே சட்டமன்ற உறுப்பினர் தொகுதி என்பதால், இந்த விவகாரம் தமிழக பா.ஜ.வுக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கும் நிலையில், நாகர்கோவில் தொகுதியில் யார் போட்டியிடப் போகிறார் என்பது பா.ஜ.வினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேஜ கூட்டணியில் குழப்பங்கல்? அன்புமணி, டிடிவி டெல்லி விசிட்! பியூஸ் கோயல் வருகை ரத்து ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்!