தமிழ்நாட்டின் தலைநகர சென்னையின் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கடத்தப்பட்ட அரசு பேருந்து, ஆந்திரப் பிரதேசத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு மீட்கப்பட்ட சம்பவம், போக்குவரத்து துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், பொது போக்குவரத்து வாகனங்களின் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையம், சென்னையின் மிகப்பெரிய புறநகர் பேருந்து முனையாகும். இங்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் இயங்குகின்றன. நேற்றைய தினம் கோயம்பேடு பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருப்பதி செல்லும் அரசுப் பேருந்து திருடப்பட்டு இருக்கிறது. அரசுப் பேருந்தை மர்ம நபர் கடத்தி சென்றதால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர், நடத்துநர் போலீசாரிடம் புகார் அளித்தனர். புகாரின்பேரில் கோயம்பேடு போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையும் படிங்க: அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து.. பயணிகளுக்கு என்ன ஆச்சு..??
இதனையடுத்து தமிழ்நாட்டு பேருந்தை பிடித்து வைத்துள்ளதாக ஆந்திர மாநிலம் நெல்லூர் போலீசார் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த பேருந்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் காவல்துறை வாகன சோதனை போது சிக்கியுள்ளது என்றும் ஒரு வாலிபர் அந்த வாகனத்தை ஒட்டி சென்று இருக்கிறார் என்றும் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், நெல்லூர் சென்ற போலீசார் பேருந்தை மீட்டதுடன், கடத்தி சென்ற ஒடிசாவை சேர்ந்த ஞானராஜன் சாகு (24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம், பேருந்து நிலையங்களின் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். மேலும் அதிகாரிகள், வாகனங்களுக்கு மேம்பட்ட லாக் அமைப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர். இது, சென்னை போக்குவரத்து வரலாற்றில் அரிதான சம்பவமாகும். பொது மக்கள், போக்குவரத்து வாகனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து.. பயணிகளுக்கு என்ன ஆச்சு..??