விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர்களில் ஒன்றாக திகழ்கிறது சிறகடிக்க ஆசை.

குடும்பம், உறவுகள் மற்றும் உணர்ச்சிகளை மையமாக கொண்டு நகரும் இந்த தொடர், தினந்தோறும் புதிய திருப்பங்களுடன் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

குறிப்பாக சமீபத்திய எபிசோட்களில் ஒரு புதிய காதல் பாதை தொடங்கியிருப்பது, இந்த தொடருக்கு கூடுதல் வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது.
இதையும் படிங்க: பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட ரன்வீர் சிங்கின் ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’..! ரிலீஸ்க்கு முன்பே வசூல் century அடித்து சாதனை..!

இப்போது இந்த தொடரில் ரசிகர்களை கவர்ந்த முக்கிய அம்சமாக மாறியுள்ளது, மீனாவின் தம்பி சத்யா மற்றும் சிந்தாமணியின் மகள் ரேகா ஆகியோருக்கிடையே உருவாகியுள்ள ‘கியூட்’ காதல்.

ஆரம்பத்தில் சின்னச் சின்ன உரையாடல்கள் மற்றும் சிரிப்புகளாக தொடங்கிய இந்த தொடர்பு, தற்போது ஒரு முழுமையான காதல் டிராக்காக வளர்ந்து வருகிறது.

இவர்களின் காட்சிகள் சமீபத்திய எபிசோட்களில் அதிகமாக இடம்பெற்றதுடன், சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த ரேகா கதாபாத்திரத்தில் நடித்துவருபவர் ப்ரீத்தி ஸ்பந்தனா. தனது இயல்பான நடிப்பாலும், முகபாவனைகளாலும், மிகக் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.

திரையில் ஒரு எளிமையான, சுறுசுறுப்பான பெண்ணாக தோன்றும் அவர், தனது நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு உயிர் ஊட்டியுள்ளார் என்று கூறலாம்.

திரையில் மட்டும் அல்லாமல், சமூக வலைதளங்களிலும் ப்ரீத்தி ஸ்பந்தனா மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.

குறிப்பாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புதிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள சில ‘கலக்கல்’ புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
இதையும் படிங்க: “ஜனய்-முக்தய் சமஜ்பூஷன்” விருதுக்கு சொந்தக்காரியான நடிகை..! ஸ்ருஷ்டி டாங்கே உழைப்புக்கு கிடைத்த கௌரவம்..!