புதுச்சேரியில் செய்தியாளரை தகாத வார்த்தைகளில் திட்டிய சீமான் மற்றும் அவர் மீது தாக்குதல் நடத்திய நாதக ஆதரவாளர்கள் மீது வில்லியனூர் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தகாத வார்த்தையில் திட்டுதல், தாக்குதல் மற்றும் கொலை மிரட்டல் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
"ஏய் பைத்தியம் வெளியே போடா'' என்று ரிப்போர்ட்டரை சீமான் பேசினார். மேலும், பெரிய ம--ரா? வெங்காயம் என்றும், பொது வெளியில் சீமான் அநாகரிகமாக பேசியது வைரலானதை அடுத்து, பல்வேறு தரப்பினரும் சீமானுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: போடா… ஆளும் மை**ம்… SIR கேள்வியால் ஆத்திரம்… செய்தியாளரை ஒருமையில் பேசிய சீமான்…!
சீமான் பேசியது என்ன?
2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு, நேற்று மதியம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டம் வில்லியனூர் தனியார் திருமண நிலையத்தில் நடைபெற்றது.
அப்போது அந்த தனியார் தொலைக்காட்சி நிருபர், `தேர்தல் ஆணையம் சொல்வதைத்தானே அரசு செய்கிறது? அதேசமயம் தி.மு.க SIR-ஐ எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறதே?’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு, `அரசு சொல்வதை தேர்தல் ஆணையம் கேட்க வேண்டுமா ? தேர்தல் ஆணையம் சொல்வதை அரசு கேட்க வேண்டுமா ?’ என்று கேட்டுக் கொண்டே இருக்கையை விட்டு எழுந்த சீமான், அந்த செய்தியாளரை ஒருமையிலும், அருவருக்கத்தக்க தகாத வார்த்தையிலும் திட்ட ஆரம்பித்தார். தொடர்ந்து, `ஒரு மைக்கையும், கேமராவையும் எடுத்துட்டு வந்துட்டா நீ வெங்காயமா ?’ என்று கேட்டவாரே அந்த செய்தியாளரை அடிக்கப் பாய்ந்தார். இதனை அடுத்து அந்த செய்தியாளரை சூழ்ந்த நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் அவரை சரமாரியாக தாக்கினர்.
அதையடுத்து தாக்குதலுக்குள்ளான அந்த நிருபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து, நிருபர் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்த நபர்களை கைது செய்ய வேண்டும் என்று, பத்திரிகையாளர் சங்கம் சார்பில் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் செய்தியாளரை தாக்கிய நாதக தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ”என் தம்பி விஜய் அதுக்கு எல்லாம் சரி பட்டு வரமாட்டாரு”... தவெக தலைவரை பொசுக்கென அசிங்கப்படுத்திய சீமான்...!