வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை கலைய கூடாது என்பதற்காக திமுக கூட்டணி கட்சியினர் எஸ்.ஐ.ஆர் எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்களா? கொளத்தூர் தொகுதியில் உள்ள போலி வாக்காளர்களை வைத்து தான் வெற்றி பெற்றார்களா? என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை கோட்ட பாரதிய ஜனதா கட்சியின் அணி பிரிவுகள், மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் முதலிப்பாளையம் பகுதியில் உள்ள எம்.என்.சி.ஆர் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். மேலும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் அணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், சட்டமன்ற உறுப்பினர் சி.ஆர் சரஸ்வதி, மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், சுதாகர் ரெட்டி, கேடி ராகவன், பேராசிரியர் கனகசபாபதி உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: பேங்க் ஊழியர்களுக்கு கிடுக்குப்பிடி..!! நிர்மலா வைத்த செக்!! பொதுமக்கள் ஹாப்பி அண்ணாச்சி..!!
2026 சட்டமன்ற தேர்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து இந்நிகழ்வில் ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, டெல்லி வெடி விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, வந்தேமாதரம் பாடல் பாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், தமிழகத்திற்கு சரியான நிதி பங்கீடு கொடுக்கவில்லை என பொய்யான பிரச்சாரத்தை தமிழக முதல்வர் பரப்பி வருவதாகவும், மாநில திமுக அரசு வரி செலுத்தும் கோயம்புத்தூர் மக்களுக்கு மட்டுமே அனைத்து திட்டங்களையும் வழங்குவோம் என்றால் சரியா என கூறினார்.
திமுக அரசு வன்மத்தோடு ஆட்சி நடத்தி வருவதாகவும் மோடி அரசின் திட்டங்களின் மூலம் தமிழக மக்கள் நன்மையடைவதை மாநில திமுக அரசு தடுத்து வருவதாக குற்றச்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும் போது : திமுக காங்கிரஸ் கூட்டணியோடு மத்திய அரசில் பங்கு வகித்தபோது ஏன் எஸ் ஐ ஆர் ஐ எதிர்க்கவில்லை? என கேள்வி எழுப்பினார்.
ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கைக்கு பிறகு குறிப்பாக தீபாவளி பண்டிகைக்கு பிறகு மக்கள் அதிகமாக பயனடைந்துள்ளனர், மக்கள் பொருட்களை வாங்கியதால் வணிகர்களுக்கும் நேரடியாக பலன் கிடைத்தது. இதற்காக பிரதமருக்கும் எனக்கும் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இன்று மாலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மேலும் பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனைக் கூட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளேன். தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக அரசு தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பட்டியல் நடவடிக்கை எதிர்த்து போராட்டங்கள் நடத்தி வருகிறது. இது புதிதாக பாரதிய ஜனதா கட்சியால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது போன்ற பிரச்சாரத்தை திமுக உருவாக்கி வருகிறது.
1952 முதல் 2004 ஆம் ஆண்டு வரை சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் நடைபெற்றுள்ளது. 2000 ஆண்டுக்கு முன்பு பத்து முறையும், இரண்டாயிரத்தில் இருந்து 2004 ஆம் ஆண்டு வரை மூன்று முறையும் நடைபெற்றுள்ளது. திமுக அரசு காங்கிரஸ் கூட்டணியில் மத்திய அரசோடு இணக்கமாக இருந்தபோது ஏன் இதை எதிர்க்கவில்லை.
தமிழக முதல்வர் மக்களின் வாக்களிக்கும் உரிமையை பறிக்கும் முயற்சி என இதனை குறிப்பிடுகிறார், துணை முதல்வர் இது குறித்து தெரியாமலே மேடைகளில் பேசி வருகிறார்.
உயிரிழந்தவர்கள் மற்றும் முகவரி மாறியவர்களை பட்டியலில் இருந்து நீக்கிடவும், சரியான முகவரியில் இருப்பவர்களை பட்டியலில் சேர்த்திடும் நடவடிக்கை இது. இதனை ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதற்கு சட்ட ரீதியாக தேர்தல் ஆணையத்திற்கு முழு உரிமையும் உண்டு.
இந்த நடவடிக்கையை திமுக எதிர்ப்பதற்கு காரணம், அரசு தோல்விகளையும் மக்கள் படும் கஷ்டங்களையும் நிராகரிப்பதற்காகத்தான்.
இதற்கு முன்பு வாக்களிக்கும் இயந்திரத்தில் முறைகேடுகள் செய்ததாக கூறி வந்தனர். ஆனால் கர்நாடகா, ஹிமாச்சல் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போது கூறவில்லை. தமிழகத்திலும் திமுக வெற்றி பெற்ற போது தேர்தல் இயந்திர முறைகேடு என கூறவில்லை. இந்த கருத்து செல்லுபடி ஆகாததால் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை வைத்து எதிர்க்கட்சிகளை மிரட்டுவதாக கூறினர். அதுவும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. அமலாக்க துறையின் நடவடிக்கையால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் வங்கிகளுக்கு சென்றுள்ளது. எனவேதான் இப்போது எஸ் ஐ ஆர் நடைமுறை கையில் எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கொளத்தூர் தொகுதியில் மட்டுமே 4379 போலி வாக்காளர்கள் உள்ளதாக தெரிகிறது. பல வாக்காளர்கள் பொய்யான விலாசத்தில் வசிப்பதாக தெரிய வருகிறது. இது போன்ற குழப்பங்களை தவிர்த்து ஒவ்வொருவரும் சரியான தகவல்களோடு வாக்களிக்க வேண்டும் என்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
பீகாரைத் தொடர்ந்து ஒன்பது மாநிலங்களிலும் மூன்று யூனியன் பிரதேசங்களிலும் இப்போது திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனை செயல்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் விதி எண் 324 முதல் 329 வரை உரிமை வழங்கியுள்ளது. தகுதியில்லாத வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து எடுக்கும் முயற்சி இது என குறிப்பிட்டார்.
டெல்லி வெடி விபத்து சம்பவம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர், சம்பவம் குறித்து முழுமையான அறிக்கை கிடைத்த பின்பு அதன் தகவல்கள் தெரியவரும் என கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING: திமுக தலையில் இடி… SIR பணிகளுக்கு தடையில்லை… சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!