கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கைக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரியிருக்கிறது. சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் மத்திய ஒப்பு ஒப்புதலுக்காக காத்திருக்கும் கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டம்.
சென்னை மெட்ரோ ரயிலை பொறுத்தமட்டில் இரண்டு கட்டங்களாக தற்போது அந்த பணிகள் என்பது மேற்கொள்ளப்பட்டு வந்தது. முதற்கட்டத்தில் விமான நிலையத்தில் இருந்து சரியாக சென்ட்ரல் வரைக்கும் அதேபோல சென்னை சென்ட்ரலில் இருந்து விம்கோ நகர் வரைக்கும் பல்வேறு பணிகள் என்பது மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது இந்த வழித்தடத்தில ரயில்கள் என்பது இயக்கப்பட்டு வரக்கூடிய ஒரு சூழலில் இரண்டாம் கட்டமாக மாதவரம் முதல் சிறுசேரி, சிப்கார்ட், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் மற்றும் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை என மூன்று வழித்தடங்கள் அதற்கான பணிகள் என்பது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் தான் கிளாம்பாக்கம் வரைக்கும் அதாவது சென்னை மெட்ரோ உடைய முதற்கட்ட திட்டம் விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரைக்கும் அதனை நீட்டிப்பு செய்வது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை என்பது தயாரிக்கப்பட்டு மத்திய அரசுடைய ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்... 12 ராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் உடல் சிதறி பலி...!
கிளாம்பாக்கத்திலிருந்து செங்கல்பட்டு வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு ஒப்பந்தம் கோரி அறிவிப்பை தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. சென்னை மெட்ரோ ரயில் முதல் திட்டத்தில் விரிவாக்கமாக விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் அமைப்பதற்கான அந்த ஒப்புதலுக்காக திட்டம் காத்திருக்கக்கூடிய நிலையில், இன்று நீட்டிக்க கூடிய வகையில் இதற்கான ஒப்பந்தப்புள்ளி என்பது கோரப்பட்டிருக்கிறது.
அதேபோல ஸ்ரீநகர் முதல் விம்கோ நகர் வரைக்கும் இதனை நீட்டிப்பது தொடர்பாகவும் தொடர்ந்து அதற்கான சாத்தியக்கூற அறிக்கையை தயார் செய்வதற்கும் ஒப்பந்த புள்ளி என்பது கோரப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு ஒப்பந்த புள்ளியும் கோறப்பட்டு அந்த விரிவான திட்ட அறிக்கை என்பது தயாரிக்கப்படக்கூடிய பட்சத்தில் அடுத்த கட்டமாக இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு மத்திய அரசிடம் ஒப்புதலுக்காக சென்னை மெட்ரோல் நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இரவோடு இரவாக மீண்டும் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி... உலக அளவில் கிடைத்த மாஸ் ரெஸ்பான்ஸ்...!