தமிழக எல்லை பகுதிகளான நாடுகாணி மற்றும் தொரப்பள்ளி பகுதியில் பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரக்கூடிய வாகனங்கள் இ பாஸ் பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது இடம் மாற்றப்பட்டு கூடலூரில் இருந்து உதகை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சில்வர் கிளவுட் என்னும் பகுதியில் இன்று காலை முதல் இ பாஸ் பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே நீலகிரி மாவட்டத்திற்குள் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது .

நீலகிரி மாவட்டம் என்பது சுற்றுலா தளங்களை மையமாகக் கொண்ட பகுதியாக உள்ளது. குறிப்பாக வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசிக்கவும் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர் இந்த நிலையில் ஏற்கனவே இ-பாஸ் நடைமுறை இருந்து வந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் ஆனது ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஜூன் மாதம் 31ஆம் தேதி இ-பாஸ் நடைமுறையானது கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஊட்டி, குன்னூரில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று காத்திருக்கும் அதிர்ச்சி ...!

வார நாட்களில் 6000 வாகனங்களும் வார இறுதி நாட்களில் 8000 வாகனங்கள் மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து கேரளா மாநிலம் மற்றும் கர்நாடகா மாநிலத்திலிருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகள் இ பாஸ் பதிவு செய்த பின்னரே சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தமிழக எல்லைப் பகுதிகளான நாடு காணி மற்றும் தொரப்பள்ளி பகுதிகளில் இ பாஸ் பரிசோதனையானது நடைபெற்று வந்தது. இப்பகுதிகள் வனப்பகுதி என்பதாலும் நெட்வொர்க் பிரச்சனைகள் இருப்பதாலும் இ பாஸ் பதிவு செய்வதற்கு சுற்றுலா பயணிகள் அவதியுற்றும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழலும் வந்தது .

இந்த நிலையில் இன்று காலை முதல் கூடலூரில் இருந்து உதகை செல்லும் தேசிய நெடுஞ்சாலை சில்வர் கிளவுட் என்னும் பகுதியில் இ பாஸ் பதிவு செய்வதற்கான இடம் மாற்றப்பட்டுள்ளது இதனால் வாகன நெரிசல் கட்டுப்படுத்த முடியும் எனவும் நெட்வொர்க் பிரச்சனைகள் இருக்காது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்றைய காலை முதல் கர்நாடகா மற்றும் கேரளா இதர மாவட்ட மாநிலங்களில் இருந்து வரக் கூடிய வாகனங்கள் அனைத்தும் சில்வர் கிளவுட் பகுதியில் இ பாஸ் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது .
இதையும் படிங்க: இன்று நள்ளிரவு முதல் ஜூன் மாதம் வரை... நீலகிரியில் அமலாகிறது புதிய கட்டுப்பாடு...!