தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்கள் செயல்படாது என போக்குவரத்து கழகம் தெரிவித்திருக்கிறது.
சென்னை மாநகர பேருந்துகளில் யூபிஐ உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளில் இந்த டிஜிட்டல் முறையிலான பயண சீட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் சென்னை மாநகர பேருந்துகளான எம்.டி.சி என்சி பேருந்துகளிலே மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் தற்பொழுது ஒரு எதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை மாநகர பேருந்துகளில் மின்னணு முறையிலான அந்த பயண சீட்டுகள் வினியோகம் செய்வதில் தடை ஏற்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவித்திருக்கின்றார்கள். இதன் காரணமாக தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்படும் வரை நடத்துணர்கள் மூலமாக என்ிசி பேருந்துகளிலே மேனுவல் முறையிலான அந்த காகித அடிப்படையிலான பயண சீட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என்று சொல்லியிருக்கின்றார்கள். எனவே இப்பொழுது யூபிஐ, என்சிஎம்சி கார்டுகள், டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உள்ளிட்டவற்றின் மூலமாக பயணச்சீட்டு பெற முடியாது. அது மட்டுமல்லாமல் சென்னை ஒன் செயலியும் தற்காலிகமாக செயல்படாது என்பதை போக்குவரத்து கழகம் சார்பில் கூறியிருக்கின்றார்கள்.
இதையும் படிங்க: ஒவ்வொரு ஓட்டும் ரன் போல..! இந்திய தேர்தல் ஆணையம் நூதன விழிப்புணர்வு...!
எனவே சென்னை மாநகர பேருந்துகளில் பயணிக்க கூடியவர்கள் சென்னை ஒன் செயலின் மூலமாகவோ யூபிஐ மூலமாகவோ பயண சீட்டுகளை பெற முடியாது என்பதால் பேருந்துகளில் செல்லக்கூடிய அந்த சென்னை மாநகர பேருந்துகளில் பயணிக்கக்கூடிய பயணிகள் உரிய சில்லறை காசுகளோடு அந்த காகித முறையிலான பயண சீட்டுகளை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் என்ற தகவலையும் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்ப கோளாறை சரி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் எம்டிசி சார்பில் சொல்லப்பட்டுள்ளது .
இதையும் படிங்க: சூடு பிடிச்சாச்சு..! ஜெ. பிறந்தநாளில் அதிமுக வேட்பாளர் பட்டியல்? திமுகவை முந்தும் EPS..!