• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... இனி கரண்ட் பில் பற்றிய கவலைக்கு முற்றுப்புள்ளி...!

    மின் விநியோகத்தை மேம்படுத்தும் நோக்கில், ரூ.1,543 கோடி முதலீட்டில் 178 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.
    Author By Amaravathi Wed, 05 Aug 2026 15:04:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai eb change to smart meter

    2036ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற அரசின் தொலைநோக்கு இலக்கை அடைவதில் எரிசக்தித் துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.

    தமிழ்நாட்டிற்கு 2,640 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தித் திறனை வழங்கும் உடன்குடி நிலை–I மற்றும் SEZ அனல் மின் திட்டம் ஆகியவற்றை விரைவாக செயல்படுத்த இந்த அரசு உறுதிபூண்டுள்ளது.

    சுமார் ரூ.8,000 கோடி மதிப்பீட்டில் "விநியோக உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்" (DIDP), பொது மற்றும் தனியார் கூட்டாண்மை  (PPP) முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதையும் படிங்க: தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அலுவலக செலவு பல மடங்கு உயர்வு? அதிகாரிகள் மீது விழும் கூடுதல் சுமை!

    மேலும், ரூ.5,050 கோடி மதிப்பீட்டில் வெள்ளிமலை நீரேற்று புனல்மின் திட்ட பணிகள் விரைவுபடுத்தப்படும்.

    அதிகபட்ச மின் தேவையை திறம்பட நிர்வகிப்பதில் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) மிக முக்கிய பங்கு வகிப்பதை உணர்ந்துள்ள இந்த அரசு, இத்துறையில் தனியார் முதலீடுகளை ஊக்குவித்து, தமிழ்நாட்டை இந்தியாவின் BESS Hub ஆக மாற்றும் வகையில் புதிய BESS ஊக்குவிப்பு கொள்கையை வெளியிடும்.

    புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை விரிவுபடுத்துவதில் அரசு தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.  பிஎம் சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா திட்டத்துடன் இணைந்து, புதிய வீட்டு கூரை சூரிய மின் மானியத் திட்டம் (Rooftop Solar Subsidy Scheme) அறிமுகப்படுத்தப்படும்.

    இந்தத் திட்டத்தின் கீழ், வீடுகளில் சூரிய மின் பலகைகள் அமைக்கும் நுகர்வோருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். இதன் மூலம் மின்சாரக் கட்டணச் சுமை குறைவதுடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடும் அதிகரித்து, பசுமை மற்றும் நிலையான வளர்ச்சிக்கும் ஊக்கம் கிடைக்கும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    சென்னை மாநகரில் உள்ள அனைத்து மின் நுகர்வோர்களுக்கும், மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள 50 லட்சம் தொழில் மற்றும் வணிக மின் நுகர்வோர்களுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

    2035–36ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தின் அதிகபட்ச மின் தேவை 37,000 மெகாவாட் அளவை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், மின் உற்பத்தி, மின் பரிமாற்றம் மற்றும் மின் விநியோகத் துறைகளில் முதலீடுகளை விரைவுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

    மாநிலத்தின் மின் விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் முக்கியத் திட்டமாக கோயம்புத்தூர்–அரியலூர் 765 கிலோவோல்ட் (kV) மின் பரிமாற்றப் பாதைத் திட்டம், ரூ.4,000 கோடி செலவில் பொது மற்றும் தனியார் கூட்டாண்மை முறையில் செயல்படுத்தப்படும்.

    மேலும், சென்னை மாநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிக உயரழுத்த மின் பரிமாற்றக் கட்டமைப்பை ரூ.390 கோடி செலவில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்து பசுமை எரிசக்தியை திறம்பட கொண்டு செல்லும் நோக்கில், ரூ.1,187 கோடி மதிப்பிலான பசுமை ஆற்றல் தாழ்வாரம் இரண்டாம் கட்ட திட்டமும், ரூ.1,640 கோடி மதிப்பிலான விருதுநகர்–கோயம்புத்தூர் 765 கிலோவோல்ட் மின் பரிமாற்றத் திட்டமும் விரைவுபடுத்தப்படும்.

    மேலும், 11,760 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை கையாளும் திறன் கொண்ட ரூ.6,884 கோடி மதிப்பிலான பசுமை ஆற்றல் தாழ்வாரம் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை செயல்படுத்த தேவையான நிதியுதவியைப் பெற அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

    மின் விநியோகத்தை மேம்படுத்தும் நோக்கில், ரூ.1,543 கோடி முதலீட்டில் 178 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.

    மேலும், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழைய Distribution Transformers படிப்படியாக மாற்றப்படும். மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், PPP முறையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20,000 பொது EV Charging Stations அமைக்கப்படும்.

    இந்தத் திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    அடுக்குமாடிக் குடியிருப்போர் நலச் சங்கங்கள் மூலம் குடியிருப்புகளில் அமைக்கப்படும் Electric Vehicle Charging Stations-க்கு அரசு மானியம் வழங்கும். இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி, இரு மாதங்களுக்கு ஒருமுறை 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோருக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம், 100 யூனிட்டிலிருந்து 200 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படுவதற்காக இந்த திருத்த வரவு–செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூ.1,545 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    வீட்டு உபயோக நுகர்வோர் மற்றும் வேளாண் மின் நுகர்வோருக்கு வழங்கப்படும் மின் மானியத்திற்காக, இந்த திருத்த வரவு–செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூ.18,860 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    மேலும், தமிழ்நாடு மின்சார விநியோகக் கழகத்திற்கு (TNPDCL) இழப்பீட்டு நிதியாக ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    2026–27ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு–செலவுத் திட்ட மதிப்பீட்டில், எரிசக்தித் துறைக்கு த்தம் ரூ.15,828 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் ரயில் திட்டங்கள் ஏன் இத்தனை தாமதம்? கர்நாடகா மாடலை பின்பற்ற கோரிக்கை!

    மேலும் படிங்க
    நதிகள் இணைப்பு..!! "வரலாற்றுத் திட்டம்"..! முதல்வர் விஜயை புகழ்ந்து தள்ளிய C. விஜயபாஸ்கர்..!

    நதிகள் இணைப்பு..!! "வரலாற்றுத் திட்டம்"..! முதல்வர் விஜயை புகழ்ந்து தள்ளிய C. விஜயபாஸ்கர்..!

    தமிழ்நாடு
    கோயில்கள் ஆகம விதி வகைப்பாடு! தமிழக அரசுக்கு 5 மாத அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

    கோயில்கள் ஆகம விதி வகைப்பாடு! தமிழக அரசுக்கு 5 மாத அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    பட்ஜெட்டால் பள்ளிக் கல்விக்கு உயர்வே..! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!

    பட்ஜெட்டால் பள்ளிக் கல்விக்கு உயர்வே..! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் ஆன்லைன் முன்பதிவு திட்டம் ஆபத்தானது! அன்புமணி இராமதாஸ் கண்டனம்!

    டாஸ்மாக் ஆன்லைன் முன்பதிவு திட்டம் ஆபத்தானது! அன்புமணி இராமதாஸ் கண்டனம்!

    தமிழ்நாடு
    20 நிமிடங்கள் திகில்.. ஜெபல் அலி கிடங்கில் 7 வெடிச்சத்தங்கள்..!! துபாயில் பரபரப்பு உச்சம்!

    20 நிமிடங்கள் திகில்.. ஜெபல் அலி கிடங்கில் 7 வெடிச்சத்தங்கள்..!! துபாயில் பரபரப்பு உச்சம்!

    உலகம்
    ஏமாற்றமே..! PM ஶ்ரீ, நவோதயா பள்ளிகள்..! மத்திய அரசு திட்டங்களை காய் நகர்த்தும் தமிழிசை..!

    ஏமாற்றமே..! PM ஶ்ரீ, நவோதயா பள்ளிகள்..! மத்திய அரசு திட்டங்களை காய் நகர்த்தும் தமிழிசை..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நதிகள் இணைப்பு..!!

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share