சென்னை ராயப்பேட்டையில் போதை மயக்கத்தில் பெண் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற ஆயுதப்படை காவலர் சூர்யா இன்று அதிரடியாகப் பணியிடை நீக்கம் (Sustension) செய்யப்பட்டுள்ளார். சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவலரே, சீருடையுடன் இத்தகைய கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டை பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவரின் வீட்டிற்குள், இன்று அதிகாலை காவலர் சூர்யா என்பவர் மதுபோதையில் அத்துமீறி நுழைந்துள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அந்தப் பெண்ணிடம் அவர் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

காவலரின் இந்த அநாகரீகச் செயலால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், சற்றும் அஞ்சாமல் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். பொதுமக்கள் திரண்டு வருவதைக் கண்ட காவலர் சூர்யா அங்கிருந்து தப்பியோட முயன்றார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா பிறந்தநாள்... களைகட்டிய அதிமுக அலுவலகம்..! ஜெ. திருவுருவச் சிலைக்கு இபிஎஸ் மரியாதை..!!
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், ராயப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அவர் சென்னை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வரும் காவலர் சூர்யா என்பது உறுதி செய்யப்பட்டது.
காவல்துறை கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதற்காகவும், ஒரு பெண்ணின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவித்ததற்காகவும், காவலர் சூர்யாவை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து சென்னை பெருநகரக் காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறையில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டால் அவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கூட்டணி வெக்காமையே என்னால ஜெயிக்க முடியும்..!! ஒரே போடு போட்ட சீமான்..!!