2025 டிசம்பர் மாதத்தில் இந்திய நாடாளுமன்றம் Central Excise (Amendment) Bill, 2025 என்ற சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியது. இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம், புகையிலை பொருட்கள் மீதான வரி அமைப்பை மாற்றியமைப்பதாகும். தற்போது, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு GST தவிர, கூடுதலாக GST compensation cess என்ற தற்காலிக வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த compensation cess விரைவில் முடிவடைய உள்ளதால், அதனால் ஏற்படும் வரி இழப்பை ஈடுகட்டவும், புகையிலை பயன்பாட்டைக் குறைக்கவும் மத்திய அரசு இந்த சட்டத்திருத்தத்தை கொண்டுவந்தது.இதன்படி, சிகரெட் மீதான central excise duty ஆனது ஆயிரம் சிகரெட்டுக்கு 200-735 ரூபாயிலிருந்து 2,050 முதல் 8,500 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த புதிய வரி 2026 பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், மெல்லும் புகையிலைக்கு 25%லிருந்து 100%, ஹூக்கா புகையிலைக்கு 25%லிருந்து 40% வரை வரி உயர்வு உள்ளது.இந்த வரி உயர்வு காரணமாக சிகரெட் விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில ஊடக அறிக்கைகளின்படி, தற்போது 18 ரூபாய் விலையுள்ள மலிவு வகை சிகரெட் ஒன்று 72 ரூபாய் வரை உயரலாம் என்று அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: Air Purifier-களுக்கும் GST-யா..?? 18% ஜிஎஸ்டி எதற்கு..?? மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் கண்டனம்..!!
இது சுமார் 300-400% உயர்வு என்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. உண்மையில், பெரும்பாலான நடுத்தர மற்றும் பிரீமியம் சிகரெட் பிராண்டுகளுக்கு விலை உயர்வு 22-28% அளவில் இருக்கும் என்று மதிப்பிடுகின்றன. ஒரு சிகரெட்டின் விலை 72 ரூபாய் வரை உயரும் என்று பரவும் தகவல் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: மீன்பிடிமுறை பிரச்சனை தீர்த்து இருந்தா இதெல்லாம் நடக்குமா? மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு செல்வப் பெருந்தகை கண்டனம்...!