ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வந்து நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் போட்டியிடக்கூடிய மதசார்பற்ற முற்போக்கு வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவாரூரிலிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அங்கு பிரச்சார பொதுக்கூட்டம் நிறைவடைந்த பின்பு இரவு திருச்சி வந்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வந்து திருச்சியில் வந்து ஓய்வெடுத்தார். இந்நிலையில் இன்று காலை முதலமைச்சர் திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட காந்தி மார்க்கெட், பாலக்கரை உள்ளிட்ட பகுதியில் நடைபயிற்சியை மேற்கொண்டு அங்கிருந்த பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது மக்கள் அவருடன் ஆர்வமாக வந்து செஃல்பி எடுத்துக் கொண்டார்.
இறுதியாக பாலக்கரை பகுதியில் உள்ள டீக்கடைக்குச் சென்று அங்கு முதலமைச்சர் தேநீர் அருந்தினார். குறிப்பாக காந்தி மார்க்கெட் பகுதி என்பது மிகவும் திருச்சி மாவட்டத்தின் மைய பகுதியாகும். அந்த மைய பகுதியில் உள்ள காந்தி மார்க்கெட் உள்ளே நடந்து சென்று அங்குள்ள வியாபாரி மட்டுமல்லாமல் அங்குள்ள பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். அப்போது அமைச்சர்கள் கே. என் நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
நாளை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு வேட்புனு தாக்கல் செய்ய உள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியிலும் திருச்சி கிழக்கு தொகுதியிலும் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். ஏற்கெனவே பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியி்ல் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக நாளை திருச்சி வருகிறார்.
இதையும் படிங்க: #BREAKING கைமீறும் கேஸ் தட்டுப்பாடு... நேரடியாக களமிறங்கும் முதல்வர் ஸ்டாலின்... இன்று அவசர ஆலோசனை...!
திருச்சி பாலக்கரை கால்நடை மருத்துவமனை அருகே உள்ள மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் விஜய் அங்கிருந்து ஊர்வலமாக வந்து மரக்கடை எம்ஜிஆர் சிலை முன்பு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். தொடர்ந்து இ.பி.ரோடு, அரியமங்கலம் பால்பண்ணை, கே.கே.நகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்யவும், இப்பகுதியில் ஊர்வலமாகச் சென்று திருச்சி விமான நிலையத்துக்கு செல்லவும் காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதனிடையே இன்றே திருச்சி கிழக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலி பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பது வாக்காளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: இளைஞர்களே..!! உழைப்பை மட்டும் கொடுங்கள்.. உயிரை அல்ல..!! முதல்வர் ஸ்டாலின் உருக்கம்..!!