தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் புதிய குழாய் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் சென்னை மற்றும் அதன் அண்டை நகராட்சிகளுக்கு தினசரி 265 மில்லியன் லிட்டர் குடிநீர் கூடுதலாக விநியோகிக்கப்படும். இத்திட்டம் சுமார் 20 லட்சம் மக்களுக்கு பயனளிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வின் போது, முதலமைச்சர் ஸ்டாலின் ‘சென்னை குடிநீர்’ என்ற புதிய மொபைல் செயலியை இணையத்தில் வெளியிட்டார். இந்த செயலி, குடிநீர் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளை மக்கள் எளிதாக புகார் செய்ய உதவும். புகாருடன் புகைப்படங்களையும் இணைத்து அனுப்பலாம். ஆண்ட்ராய்ட் மற்றும் iOS தளங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கும் இந்த செயலி, மக்களின் புகார்களை விரைவாக தீர்க்க உதவும் என்று முதலமைச்சர் கூறினார்.
இதையும் படிங்க: "CHENNAI ONE" மொபைல் ஆப்.. முதல்வரின் புது முன்னெடுப்பு.. தொடங்குகிறது போக்குவரத்து புரட்சி..!!
“நீர் என்பது அடிப்படை உரிமை. இந்த செயலி மூலம் சென்னை மக்கள் தங்கள் பிரச்சினைகளை நேரடியாக அறிவிக்கலாம். அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்,” என்று ஸ்டாலின் கூறினார். இதற்கு முன், 2016இல் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ‘அம்மா குடிநீர்’ திட்டத்தை தொடங்கியதை நினைவுகூர்ந்து, தற்போதைய திட்டம் அதன் தொடர்ச்சி என்று அவர் சுட்டிக்காட்டினார். செயலி தவிர, புகார்களை இமெயில், வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் X ஆகியவற்றின் மூலமும் பதிவு செய்யலாம். இச்செயலியை சென்னை குடிநீர் வாரியம் வடிவமைத்துள்ளது.
இத்திட்டங்கள், சென்னையின் நீர் பற்றாக்குறை பிரச்சினையை குறைக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். கடந்த ஆண்டுகளில் பெய்த மழைக்கு பின் நீர்மட்டம் உயர்ந்தாலும், வளரும் நகர சாலை இன்றும் சவாலாக உள்ளது. ‘சென்னை குடிநீர்’ செயலி, டிஜிட்டல் ஆட்சியின் ஒரு மேடையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சென்னை மாநகராட்சி மற்றும் மெட்ரோ வாட்டர் அதிகாரிகள், 50 புதிய நீர் விற்பனை இயந்திரங்களை ஏற்கனவே நிறுவியுள்ளனர். இவை கடற்கரைகள், பூங்காக்கள், கோயில்கள், பேருந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களில் உள்ளன. இத்திட்டங்கள் அனைத்தும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்.
இந்நிலையில் ‘சென்னை குடிநீர்’ மொபைல் செயலி குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது, ChennaiMetroWater தொடர்பான அனைத்துப் புகார்களையும் எளிமையாகப் பதிவு செய்ய 'சென்னை குடிநீர் செயலி' எனும் புதிய Mobile App அறிமுகம்! புகைப்படம் மற்றும் location இணைத்துப் புகார் தெரிவித்தால், உரிய காலத்தில் உதவிப் பொறியாளர் மூலம் தீர்வு இல்லையெனில், 48 மணி நேரத்தில் உயர் அலுவலருக்குப் புகாரளிக்கும் வசதி. DravidianModel: மக்களை மையப்படுத்திய, தீர்வுகளை நோக்கிய நிர்வாகம்! என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், அனைவருக்கும் தரமான குடிநீர்: சொன்னோம்... செய்கிறோம்!
செம்பரம்பாக்கத்தில் இருந்து, சென்னை மாநகருக்கு நாளொன்றுக்குக் கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகத்தைத் தொடங்கி வைத்தேன்! இதனால், சென்னையின் அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார் மண்டலங்கள், தாம்பரம் மாநகராட்சியின் குன்றத்தூர் மற்றும் திருப்பெரும்புதூர் நகராட்சிகளில் உள்ள 20 இலட்சம் பொதுமக்கள் பயன்பெறப் போகின்றனர்... என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இனி வீட்டிலிருந்தே மாற்றலாம்.. e-Aadhaar மொபைல் ஆப் விரைவில் அறிமுகம்..!!