தமிழ்நாட்டின் அரசியல் சூழல் நேற்று நடந்த நிகழ்வுகளால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது 73-வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிக் கொண்டிருந்தபோது, கூட்டணி அரசியலில் புதிய அதிர்வுகள் வெளிப்பட்டன. வழக்கமாக “மை டியர் பிரதர்” என்று உருகும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்த முறை மிகவும் தாமதமாகவும், வெறும் ‘ஃபார்மல்’ வாழ்த்தோடு மட்டுமே நிறுத்திக் கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி அதிகாலையிலேயே வாழ்த்திய நிலையில், ராகுல் காந்தி மதியம் 2 மணிக்குப் பிறகே எக்ஸ் தளத்தில் வாழ்த்து பதிவு செய்தார். அதிலும் “சகோதரர்” என்ற பாச வார்த்தை இல்லாமல், வெறும் “தமிழக முதல்வர்” என்ற சம்பிரதாய வாழ்த்துதான் இருந்தது.
இதற்கு ஸ்டாலின் கொடுத்த பதில்தான் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது. பிற தலைவர்களுக்கு விரிவாகவும், பாசத்துடனும் பதிலளித்த அவர், ராகுலுக்கு மட்டும் “நன்றி (Thank you for your warm wishes)” என்று மிகச் சுருக்கமாக, எந்த கூடுதல் பாசமும் இன்றி முடித்தார். “நீ தள்ளி நின்றால், நானும் தள்ளி நிற்பேன்” என்ற சிம்பிள் டோன், டெல்லி வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் தரப்பு தமிழ்நாட்டில் 40-க்கும் மேற்பட்ட இடங்களை கேட்டு அடம்பிடிக்கிறது. ஆனால் திமுக அறிவாலயம் “25-க்கு மேல் கிடையாது” என்ற கறாரான நிலைப்பாட்டில் உள்ளது. இதனால், “ராகுல் பிடிவாதம் பிடித்தால், காங்கிரஸ் இல்லாமல் தேர்தலைச் சந்திக்கவும் நான் தயார். இது லோக்சபா தேர்தல் அல்ல, சட்டசபை தேர்தல். திமுக ஆட்சி வேண்டுமா வேண்டாமா என்பதற்கான தேர்தல். இங்கே ராகுலுக்கு வேலையே இல்லை” என்ற ஸ்டாலினின் ஒற்றை வரிப் பதில், அரசியல் விமர்சகர்களால் ‘டாப் நாட்ச்’ எனக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: சமரசம் செய்து கொண்டார் பிரதமர் மோடி..!! மீண்டும் அவர் சரண்டர் ஆவார்..!! ராகுல் காந்தி கடும் தாக்கு..!!
ஆனால், காங்கிரஸ் விலகினாலும் ஸ்டாலின் கையில் புதிய அஸ்திரங்கள் உள்ளன. சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. பிரேமலதா விஜயகாந்த் திமுகவோடு கைகோர்த்திருப்பது, வட மாவட்டங்களில் புதிய பலத்தை அளிக்கிறது. தேமுதிக ஒரு கட்டுப்பாடில்லாத குதிரை; அதை சரியாக பயன்படுத்தினால் பெரிய பலன் தரும். அதேபோல், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் திமுக பக்கம் சாய்ந்திருப்பது, தென் மாவட்டங்களில் ஜாதி ரீதியான வாக்குகளைத் திரட்ட ஸ்டாலினுக்கு பேருதவியாக இருக்கும்.
மறுபுறம், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’ (TVK) மூன்றாவது அணியாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கலாம் என்ற பேச்சும் இருந்தது. ஆனால், தற்போது கிளம்பியுள்ள விஜய் – சங்கீதா விவாகரத்து மற்றும் நடிகை தொடர்பான சர்ச்சை, விஜய்யின் அரசியல் பிம்பத்தை பலவீனப்படுத்தியுள்ளது. இதனால், தேர்தல் வியூகங்களில் விஜய் சற்றே பின்வாங்கியுள்ளார். இது திமுகவிற்கு சாதகமாகவே முடிந்துள்ளது.
தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், ஸ்டாலின் மிகவும் தெளிவாக இருக்கிறார். ராகுல் காந்தியின் மேலாதிக்கத்தை ஏற்கத் தயாராக இல்லை. ஒருவேளை காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறினாலும், ஓ.பி.எஸ் மற்றும் தேமுதிக போன்ற புதிய கூட்டாளிகளை வைத்துக்கொண்டு 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். இந்த அரசியல் சூழல், தமிழ்நாட்டின் தேர்தல் வியூகத்தில் புதிய பரிமாணங்களை உருவாக்கி, கூட்டணி அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய தருணமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி ஏஐ மாநாட்டில் சீன ரோபோ நாய்..!! சீனா நம்மை கேலி செய்கிறது..!! கொந்தளித்த ராகுல்காந்தி..!!