ஆளுநருக்கு விவகாரத்தில் குடியரசுத் தலைவர் குறிப்பை வன்மையாக கண்டிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், ஜனாதிபதி கேள்வி எழுப்பி இருப்பதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மத்திய அரசின் முகவர்களாகச் செயல்படும் ஆளுநர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதன் மூலம் பலவீனப்படுத்தும் ஒரு தீவிர முயற்சி இது. இது சட்டத்தின் மகத்துவத்தையும் அரசியலமைப்பின் இறுதி விளக்கவுரையாளராக உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் நேரடியாக சவால் விடுவதாக தெரிவித்தார் .

ஆளுநர்கள் செயல்படுவதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பதில் ஏன் எந்த ஆட்சேபனையும் இருக்க வேண்டும்.,மசோதா ஒப்புதலில் காலவரையற்ற தாமதங்களை அனுமதிப்பதன் மூலம் பாஜக தனது ஆளுநர்களின் தடையை சட்டப்பூர்வமாக்க முயற்சிக்கிறதா., பாஜக அல்லாத மாநில சட்டமன்றங்களை முடக்க மத்திய அரசு விரும்புகிறதா என அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: ஊட்டி மலர் கண்காட்சியை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.. வழியெங்கும் மக்கள் உற்சாக வரவேற்பு..!

இந்தக் குறிப்பில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள், அரசியலமைப்பின் அடிப்படை அதிகாரப் பகிர்வை சிதைத்து, எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் மாநில சட்டமன்றங்களை செயலிழக்கச் செய்யும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் தீய நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன. எனவே, இது மாநில சுயாட்சிக்கு ஒரு தெளிவான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்றும் இந்த மோசமான சூழ்நிலையில், அரசியலமைப்பைப் பாதுகாக்க இந்த சட்டப் போராட்டத்தில் இணையுமாறு அனைத்து பாஜக அல்லாத மாநிலங்களையும் கட்சித் தலைவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: கூச்சமே இல்லைல..! பொள்ளாச்சி வழக்கில் திமுகவுக்கு என்ன பங்கு? மு.க.ஸ்டாலினை உரித்தெடுத்த இபிஎஸ்..!