வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

கரூர் கோர விபத்து.. உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

கரூர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் ஆத்தூர் கிராமம், நாமக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையின் சின்ன வடுகபட்டி என்ற இடத்தில் பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், 27 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்ச ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கிடவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இதுதான் திராவிட மாடல்! கல்வியின் சமூக நீதிக்கான வெற்றி இது… மகிழ்ச்சியில் முதல்வர்!

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும்  தெரிவித்துக் கொண்டதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சுப்ரீம் கோர்ட்டுக்கே சவாலா..? மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी