தமிழக அரசின் கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் இரண்டு நாட்கள் சிவகங்கை மாவட்டத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த அரசு முறைப் பயணத்தின் போது, மாவட்டத்தின் உள்கட்டமைப்பு மற்றும் கல்வி வளர்ச்சிக்காக பிரம்மாண்டமான திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.
கானாடுகாத்தான் பேரூராட்சியில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட அரசு விழாவில், சுமார் ரூ.2,560 கோடி மதிப்பிலான 49 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கிறார். இதில் காரைக்குடியில் அமைக்கப்பட்டுள்ள நவீன மினி டைடல் பார்க், வேளாண் கல்லூரி மற்றும் புதிய சட்டக்கல்லூரி வளாகங்கள் ஆகிய முக்கிய உள்கட்டமைப்புகள் அடங்கும். மேலும், ரூ.13.36 கோடி மதிப்பிலான 28 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அந்தந்தப் பகுதிகளில் பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட உள்ளார்.
இந்த ஆய்வின் சிகரமாக, ரூ.205 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை 15,453 பயனாளிகளுக்கு நேரடியாக முதலமைச்சர் வழங்குகிறார். இது தவிர, சுதந்திரப் போராட்டத் தியாகிகளான காந்தி-ஜீவா நினைவாக அமைக்கப்பட்டுள்ள அரங்கினையும் அவர் திறந்து வைத்து கௌரவிக்கிறார். முதலமைச்சரின் இந்த நேரடி ஆய்வின் மூலம் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதால், தென் மாவட்ட மக்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: "சமத்துவத்திற்கு ஒரு புதிய விடியல்!" - UGC புதிய விதிகளை வரவேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி
இதையும் படிங்க: "கும்பகோணம் தனி மாவட்டமாகுமா?" - முஸ்லிம் லீக் மாநாட்டில் முதலமைச்சருக்கு விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை..!