தமிழ்நாடு அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதி வரும் நடிகர் தளபதி விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மூலம் பெரும் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, சட்டசபையில் அவரது பேச்சுகள் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வரிசையில், இன்று நடைபெற்ற சட்டப்பேரவை அமர்வில் அவர் ஆற்றிய உரை முழுமையாக வைரலாகி, #அப்பாவகாணோம் என்ற ஹாஷ்டேக் டிரெண்டிங் ஆனது.
இது வெறும் மீம் அல்ல; அரசியல் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான மோதல், ரசிகர்களின் உற்சாகம் மற்றும் சமூக ஊடகங்களின் வேகத்தைப் பிரதிபலிக்கிறது. இந்த நிகழ்வு நடந்த சூழல் முக்கியமானது. TVK ஆட்சியமைத்த புதிய அரசில், எதிர்க்கட்சிகளான DMK உள்ளிட்டவை அரசின் செயல்பாடுகள், மின் தடை, சட்டம் ஒழுங்கு போன்ற விவகாரங்களில் கேள்விகளை எழுப்பி வந்தன. குறிப்பாக, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பேச்சுகளை வெளியிட்டனர்.

முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டசபையில் பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு சிறு கதையை நையாண்டியுடன் பேசினார். அந்தப் பேச்சில் “அப்பா வா காணோம்” என்று கூறியது ஆதரவாளர்களால் உடனடியாகப் பிடிபட்டு, ஹாஷ்டேக் உருவானது.
இதையும் படிங்க: மேகதாதுவுக்கு நடுவர் மன்றமா..? இன்னும் மோசமாகும்... எச்சரித்த சீமான்..!
பல போஸ்ட்களில், “Hey விஜய் வெளிய வா... வந்து CM ஆய்ட்டார். Hey CM பேசு... இதோ பேசிட்டேன்” என்று கேலியாக எழுதப்பட்டு, #அப்பாவகாணோம் ஹாஷ்டேக்குடன் பகிரப்பட்டது. இது DMK தரப்பினரின் முந்தைய “விஜய் வெளிய வா” போன்ற கோஷங்களுக்கு பதிலடியாகவும், விஜய்யின் தைரியமான பேச்சுக்கு ரசிகர்கள் கொடுத்த உற்சாக வரவேற்பாகவும் மாறியது.
இதையும் படிங்க: முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க விஜய்! முதல்வர் சொன்ன குட்டி ஸ்டோரி! சிவசங்கர் கொதிப்பு!