முதலமைச்சர் விஜய் என்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சினிமா பிரபலங்களும், பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்த வருகின்றனர். பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் உட்பட ஏராளமானோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். முதல்வர் விஜயின் பிறந்த நாளை தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முதலமைச்சரின் விஜய்க்கு தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார். நல்ல உடல்நலத்துடனும், மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியுடனும் திகழ வாழ்த்துவதாகவும் கூறினார்.

தமிழ் மக்களின் உரிமைகள், கண்ணியம் மற்றும் அபிலாஷைகளைப் பாதுகாப்பதிலும், மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து பணியாற்றுவதிலும் தங்களுடன் உறுதுணையாக நிற்பேன் என்றும் முதல்வர் விஜய்க்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறினார்.
இதையும் படிங்க: சரித்திரம் படைத்த முதல்வா..! சமூக நீதியின் சகாப்தமே..!! CM விஜயை புகழ்ந்த அமைச்சர் அருண்ராஜ்..!!
நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன் என்றும் தெரிவித்தார். மேலும் முதலமைச்சர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாட்டு முதல்வருமான விஜய்க்கு தன்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள் என்றார். உங்களுடைய பொதுவாழ்க்கைக்கானச் செயல்பாடுகளும், அரசியல் பணிகளும் சிறக்கட்டும் என்றும் சீமான் வாழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க: ஸ்கூல் உங்க புகழ்பாடும் மேடை இல்ல..! முதல்வர் விஜயை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்..!