தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளில் ஆளும் தமிழக வெற்றிக் கழகம் அசைக்க முடியாத பெருவெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் அமைச்சர்களுடன் இணைந்து முதல்வர் ச. ஜோசப் விஜய் உற்சாகமாகக் கொண்டாடினார்.
அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகிய இருவருக்கே தவெக மீண்டும் வாய்ப்பளித்திருந்தது.

தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் பி. சத்யபாமா 66,841 வாக்குகளைப் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ். சுகன்யாவை (57,370 வாக்குகள்) விட 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கே. பானுமதி 45,280 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
இதையும் படிங்க: அன்புமணிக்கு விஜய் சர்ப்ரைஸ் கால்..! பிறந்தநாள் வாழ்த்து..! முக்கிய உரையாடல்..!
மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், திமுக வேட்பாளர் ஐ. பரந்தாமனை விடத் தொடக்கம் முதலே 16,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுத் தனது வெற்றியை உறுதி செய்தார். அதிமுக வேட்பாளர் எஸ். கணிதா சம்பத் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

இடைத்தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி தவெக வெற்றி வாகை சூடியதைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்திற்கு அமைச்சர்கள் நேரில் வருகை தந்தனர்.
அமைச்சர்களான என். ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்), பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
அப்போது முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் கையை மார்பில் வைத்து தவெகவின் வெற்றிக் குறியீட்டு சைகையைக் காட்டித் தங்களது எல்லையற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உற்சாகமாகக் கொண்டாடினர்.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் அடித்து நொறுக்கிய தவெக..! தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் கொண்டாட்டம்..!