சென்னையை சார்ந்த படைப்பாளர்கள் சங்கமம் தரப்பில் அமைக்கப்பட்ட அரங்கில் அமைக்கப்பட்ட வள்ளுவர் சிலைக்கு மாலை, பொட்டு, ருத்ராட்சம் அணித்து காட்சி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கோவை கொடிசியா வளாகத்தில் இன்று புத்தகத் திருவிழா இன்று ஆரம்பமானது. கோவை மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை, கொடிசியா இணைந்து நடத்துகின்ற இந்த புத்தகத் திருவிழாவில், 300க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன .
இதில் சென்னை சார்ந்த படைப்பாளர்கள் சங்கமம் சார்பாக அமைக்கப்பட்ட அரங்கில், புத்தகங்கள் மட்டுமின்றி விவேகானந்தர், பாரதியார் மற்றும் திருவள்ளுவர் சிலைகள் இடம் பெற்று இருக்கின்றன. இதில் இடம்பெற்ற திருவள்ளுவர் சிலையானது காவி உடை அணிந்து, பொட்டு வைத்து ருத்ராட்சம் போட்டிருப்பது போல வள்ளுவர் சிலையை காட்சிப்படுத்திருக்கின்றனர் .
இதையும் படிங்க: பரபரப்பை கிளப்பிய டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட் - எஸ்.பி. அதிரடி உத்தரவு...!
இது குறித்து அவர்களிடம் கேட்டபோது, தேசிய சிந்தனை உடையவர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் தாங்கள் படைப்பாளர்கள் சங்கமத்தை நடத்தி வருவதாகவும், வள்ளுவர் சிவன், பெருமாள் குறித்து தெரிவித்துப்பதாகவும், அவர் பிறவி பெருங்கடல் நீந்துவார் என்று ஆரம்பிக்கும் குறளில், இறைவன் குறித்து பேசியிருப்பராகவும், பிறவி என்ற நம்பிக்கை இந்து மதத்தில் இருப்பதனால், திருவள்ளுவருக்கு இவ்வாறு உடை அணிந்திருப்பது போல காட்சிப்படுத்தியிருப்பதாக தெரிவித்தனர்.
வள்ளுவர் வாழ்ந்த காலத்தில், அவர் என்ன உடை அணிந்திருந்தார் என்று யாருக்கும் தெரியாது, எங்கள் விருப்பப்படி காவி உடை அணிந்த திருவள்ளுவரை காட்சிப்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆளுநர் மற்றும் பாஜகவினர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் திருவள்ளுவருக்கு காவி உடை அணியப்படுவது சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.
சமீபத்தில் ஆளுநர் மாளிகையில் டாக்டர்களுக்கு வழங்கப்பட்ட விருதியில் திருக்குறளிலேயே இல்லாத குரல் இடம் பிடித்திருந்தற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கோவை புத்தகத் திருவிழாவில் மீண்டும் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: பழனி ஆண்டவனுக்கு அரோகரா..!! 3ம் படை வீட்டில் இத்தனை கோடி காணிக்கை வசூலா..!!