பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகாரில் தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 தேதி அன்று வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பீகார் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
பீகார் மாநிலத்தில் 243 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

கிட்டத்தட்ட ஒரு 7 கோடி வாக்காளர் இருக்கின்ற அந்த மாநிலத்தில ஏறத்தாழ ஒரு 67% வாக்குகள் பதிவாகி இருந்தன. பீகாரில் இருக்கக்கூடிய இந்த 38 மாவட்டங்களில் இருக்கக்கூடிய 46 மையங்களிலும் இந்த 67 சதவீத வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி உள்ளது.
இதையும் படிங்க: 170 தொகுதிகளில் சொல்லி அடிப்போம்... நாங்க தான் கிங்... பாஜக செய்தி தொடர்பாளர் உறுதி...!
பீகார் சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை 2000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். முதலமைச்சராக இருக்கக்கூடிய நிதீஷ் குமார் பாஜக அணியின் சார்பில் தற்பொழுதும் போட்டியில் இருக்கின்றார். அதேபோன்று தேஜஸ் யாதவ் காங்கிரஸ் இடதுசாரிகளோடு கூட்டணி அமைத்து இறங்கி உள்ளார்.
வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பீகார் தேர்தலில் இந்தியா கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 110 இடங்களில் வெற்றி இருந்த இந்தியா கூட்டணி தற்போது 77 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. கடந்த தேர்தலை விட 30 இடங்களுக்கு மேல் இந்தியா கூட்டணி பின்னடைவை இருக்கிறது. தற்போதைய நிலவரம் இந்தியா கூட்டணியினர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: #BREAKING: அடித்து ஆடும் பாஜக... பெரும்பான்மையை தாண்டி அசத்தல்... 161 தொகுதிகளில் முன்னிலை...!