தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று அழைக்கப்படும் கட்சி, பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்ந்து நெருக்கமடைந்து வருவதால், எதிர்க்கட்சிகளிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பது அதிமுகவுக்கு நல்லதில்லை என்று கூட கூறுகின்றனர்.
குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் செல்வாக்கின் கீழ் அதிமுக செயல்படுவதாகவும், கட்சி தலைமை டெல்லியின் அடிமையாக மாறியிருப்பதாகவும், திமுக தலைவர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகள், தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் அதிமுகவின் நம்பகத்தன்மையைப் பாதிக்கின்றன.

திமுக போன்ற கட்சிகள், இதை விமர்சித்து, 2026 தேர்தலில் அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று மக்களை அழைக்கின்றன. அதிமுகவில் நிகழ்வும் பிரச்சனைகளுக்கு காரணமே பாஜக தான் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாது கூட்டணி வைக்கும் மாநில கட்சிகளை சிதைப்பதை பாஜகவின் முழு நேர வேலை என்றும் பாஜக சேர்ந்த கூட்டணி சர்வநாசம் என்றும் கூட கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டின் நலனுக்காகவே கூட்டணி வைக்கப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி பேசி வரும் நிலையில், மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தனது சுற்றுப்பயணத்தில் கூட பாஜக கூட்டணி குறித்து உயர்த்தி பேசி வருகிறார்.
இதையும் படிங்க: பீகார் தேர்தலில் முறைகேடு நடக்க விடமாட்டோம்! காங்கிரஸ் MP ராகுல் காந்தி திட்டவட்டம்...
இதனிடையே, அதிமுகவை கபளீகரம் செய்வதற்கு அமித்ஷா தலைமையில் சதி குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாணிக்கம் தாகூர் எம்பி குற்றம்சாட்டி உள்ளார். அதிமுக முழுமையாக அமித்ஷா காலில் விழுந்து கிடக்கிறது என்பது எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தில் இருந்தே உறுதியாகியுள்ளது என்றும் விமர்சித்தார்.
இதையும் படிங்க: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரட்டும்.. தேர்தல் ஆணையத்துக்கு அப்ப இருக்கு கச்சேரி! ராகுல் காந்தி திட்டவட்டம்..!