தமிழகச் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), தான் போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள பாலன் இல்லத்தில் நடைபெற்ற மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு, மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் அவர்கள் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
பாஜக மற்றும் அதிமுக-வின் 'பிரிவினை அரசியலை' மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும், தமிழக முதலமைச்சரின் நலத்திட்டங்கள் கூட்டணிக்கு வரலாறு காணாத வெற்றியைத் தேடித்தரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல்:
தளி -ராமசந்திரன், திருத்துறைப்பூண்டி - மாரிமுத்து, பவானிசாகர் - சுந்தரம், திருப்பூர் வடக்கு - ரவி, ஸ்ரீவில்லிபுதூர் - பி.மகாலிங்கம்
இதையும் படிங்க: #Breaking: தனித்துப் போட்டி! 43 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் டாக்டர் கிருஷ்ணசாமி!
அறிவிக்கப்பட்ட 5 வேட்பாளர்களும் கட்சியின் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளில் நீண்ட காலம் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாங்கள் எங்கும் உடைபடவில்லை. எங்களது அரசியல் ஆழம் குறித்து அவர் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் நலக் கூட்டணி என்ற உண்மையை அவர் ஒப்புக்கொண்டதற்கு நன்றி என்று குறிப்பிட்டார். பல கட்சிகள் இயங்கும் நாட்டில் புதிய கட்சிகள் வரும்போது இடங்களை விடக் கொள்கையே முக்கியம் என்றும், உழைக்கும் மக்களின் உரிமைப் போரில் இடதுசாரிகளின் பங்கு அளப்பரியது என்றும் அவர் தெரிவித்தார். ஏழைகள் நிறைந்த நாட்டில் இலவசங்கள் வழங்குவது தவறில்லை; அதன் பெயர் வேண்டுமானால் வேறாக இருக்கலாம் என்று அவர் விளக்கம் அளித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் (மார்ச் 31) வெளியிடப்படும். இது உழைக்கும் மக்கள், மொழி மற்றும் நாட்டின் நலன் சார்ந்த அம்சங்களைக் கொண்டிருக்கும். மேலும், நாளை நடைபெறும் செயற்குழு கூட்டத்தைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சிறு கூட்டங்களை நடத்தி மக்களைச் சந்திக்கவும் கட்சித் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: திருவாரூரில் இருந்து ஸ்டாலின் பிரசாரம் தொடக்கம்! மார்ச் 31 முதல் ஏப்ரல் 2 வரை பயணத் திட்டம்!