• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “இது கொண்டாட்டத்துக்கான வருஷம் இல்ல.. போராட்டத்துக்கான வருஷம்!” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புத்தாண்டு வாழ்த்து!

    பிறக்கின்ற 2026-ஆம் ஆண்டு அநீதிகளுக்கு எதிரான போராட்டங்களின் ஆண்டாக மலரட்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 31 Dec 2025 09:25:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cpim-new-year-2026-message-call-for-nationwide-general

    “புதிய ஆண்டில் நல்லதே நடக்க வேண்டும் என்ற மக்களின் நம்பிக்கையும் கனவுமே மனித குலத்தை நகர்த்திச் செல்கிறது; அந்த வகையில் பிறக்கின்ற 2026-ஆம் ஆண்டு அநீதிகளுக்கு எதிரான வீரியமிக்க போராட்டங்களின் ஆண்டாய் மலரட்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    மதச்சார்பற்ற ஜனநாயக விழுமியங்களை அசைத்துப் பார்க்கும் ஒன்றிய பாஜக அரசின் போக்கைக் கண்டித்துள்ள அவர், பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள அகில இந்தியப் பொது வேலை நிறுத்தத்தை வெற்றியாக்க அறைகூவல் விடுத்துள்ளார். மேலும், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் வெற்றி காலத்தின் கட்டாயம் எனவும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் இன்று விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், கடந்து செல்லும் 2025-ஆம் ஆண்டு உலகெங்கிலும் மக்களுக்கு ஏராளமான அனுபவச் செறிவையும் போராட்ட உணர்வையும் தந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். “அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் இஸ்ரேல் நடத்தும் இனவெறித் தாக்குதலால் பாலஸ்தீன மக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்; அநீதி நிறைந்த முதலாளித்துவத்தால் மனித குலத்தின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாது என்பதற்கு உலக நிகழ்வுகளே சாட்சி” என அவர் சாடினார். சமத்துவமான சோசலிச சமூகம் அமைவதற்கான போராட்டங்கள் இந்தப் புதிய ஆண்டில் இன்னும் வீரியமாக எழ வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: 2026 புத்தாண்டு கொண்டாட்டம்: “நைட் 9 மணிக்கு மேல சென்னையே போலீஸ் கண்ட்ரோல்!” ஜாலியா இருங்க ஆனா ரூல்ஸ் இதுதான்!

    இந்தியாவின் உள்நாட்டுச் சூழல் குறித்துக் கவலை தெரிவித்துள்ள பெ. சண்முகம், “பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, நமது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தூண்களான மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கப் பார்க்கிறது; மக்கள் மீது அறிவிக்கப்படாத யுத்தத்தைத் தொடுத்துள்ள இந்த அக்கிரமத்தை முறியடிக்கப் போராட்ட வியூகங்களே ஒரே வழி” எனத் தெரிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, வரும் 2026 பிப்ரவரி 12-ஆம் தேதி அனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மாபெரும் ‘பொது வேலை நிறுத்தத்தை’ வெற்றியாக்க உழைக்கும் வர்க்கத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    எதிர்வரும் 2026-ஆம் ஆண்டில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்கள் குறித்துக் குறிப்பிட்ட அவர், “இந்தத் தேர்தல்களில் இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள் வெற்றி பெறுவது மாநில உரிமைகளைப் பாதுகாக்க மிக அவசியமானது” எனத் தெரிவித்தார். ஜாதிய மற்றும் பாலின ஒடுக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மதநல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் புத்தாண்டில் புத்தெழுச்சியான போராட்டங்கள் உருவாக வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். “புதிய பாதைகளைப் புதிய ஆண்டு திறந்துவிடும்” என்ற நம்பிக்கையுடன், தமிழக மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அவர் தனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

     

    இதையும் படிங்க: தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! சத்யபிரத சாகுவுக்கு புதிய பொறுப்பு!

    மேலும் படிங்க
    "ஜனநாயகன்" படக்குழுவிற்கு முதல் வெற்றி! லீக் செய்த இணையதளங்களை முடக்கியது சைபர் கிரைம் போலீஸ்!

    "ஜனநாயகன்" படக்குழுவிற்கு முதல் வெற்றி! லீக் செய்த இணையதளங்களை முடக்கியது சைபர் கிரைம் போலீஸ்!

    தமிழ்நாடு
    15 மணிநேரம்.. தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை..!! சமாதானம் ஆகுமா அமெரிக்கா-ஈரான்..??

    15 மணிநேரம்.. தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை..!! சமாதானம் ஆகுமா அமெரிக்கா-ஈரான்..??

    உலகம்
    ஐபிஎல் 2026: இன்று இரண்டு மெகா போட்டிகள்! லக்னோ vs குஜராத் மற்றும் மும்பை vs பெங்களூரு அணிகள் மோதல்!

    ஐபிஎல் 2026: இன்று இரண்டு மெகா போட்டிகள்! லக்னோ vs குஜராத் மற்றும் மும்பை vs பெங்களூரு அணிகள் மோதல்!

    கிரிக்கெட்
    நெருங்கும் தேர்தல்..!! வாக்குப்பதிவுக்கு தயாராகும் பணிகள் தீவிரம்..!!  ‘பூத் சிலிப்

    நெருங்கும் தேர்தல்..!! வாக்குப்பதிவுக்கு தயாராகும் பணிகள் தீவிரம்..!! ‘பூத் சிலிப்' வழங்கும் பணி இன்று தொடக்கம்..!!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (12-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணவரவு அதிகரிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (12-04-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணவரவு அதிகரிக்கும்..!!

    ஜோதிடம்
    #BREAKING: ஐபிஎல் 2026: சதம் அடித்து அசத்திய சஞ்சு சாம்சன்..!! டெல்லியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றி..!!

    #BREAKING: ஐபிஎல் 2026: சதம் அடித்து அசத்திய சஞ்சு சாம்சன்..!! டெல்லியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றி..!!

    கிரிக்கெட்

    செய்திகள்

    "ஜனநாயகன்" படக்குழுவிற்கு முதல் வெற்றி! லீக் செய்த இணையதளங்களை முடக்கியது சைபர் கிரைம் போலீஸ்!

    தமிழ்நாடு
    15 மணிநேரம்.. தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை..!! சமாதானம் ஆகுமா அமெரிக்கா-ஈரான்..??

    15 மணிநேரம்.. தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை..!! சமாதானம் ஆகுமா அமெரிக்கா-ஈரான்..??

    உலகம்
    நெருங்கும் தேர்தல்..!! வாக்குப்பதிவுக்கு தயாராகும் பணிகள் தீவிரம்..!!  ‘பூத் சிலிப்' வழங்கும் பணி இன்று தொடக்கம்..!!

    நெருங்கும் தேர்தல்..!! வாக்குப்பதிவுக்கு தயாராகும் பணிகள் தீவிரம்..!! ‘பூத் சிலிப்' வழங்கும் பணி இன்று தொடக்கம்..!!

    தமிழ்நாடு
    பாடகி ஆஷா போஸ்லேவுக்கு மாரடைப்பு! கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

    பாடகி ஆஷா போஸ்லேவுக்கு மாரடைப்பு! கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

    இந்தியா
    அமைச்சர் எ.வ. வேலு டெபாசிட் இழக்க வேண்டும் - திருவண்ணாமலையில் அன்புமணி அனல் பறக்கும் பரப்புரை!

    அமைச்சர் எ.வ. வேலு டெபாசிட் இழக்க வேண்டும் - திருவண்ணாமலையில் அன்புமணி அனல் பறக்கும் பரப்புரை!

    அரசியல்
    தஞ்சையில் ஈபிஎஸ் - டிடிவி தினகரன் பிரச்சாரம்!

    தஞ்சையில் ஈபிஎஸ் - டிடிவி தினகரன் பிரச்சாரம்! "மத்திய அரசுடன் இணக்கம் அவசியம்" - எடப்பாடி அதிரடி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share