• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முதல்வர் பெயரில் போலி AI வீடியோ.. ராஜஸ்தானில் குற்றவாளியை வளைத்து பிடித்த சிபிசிஐடி!

    தமிழ்நாடு முதலமைச்சர் பெயரில் போலி AI டீப் பேக் வீடியோ தயாரித்து நிதி மோசடியில் ஈடுபட்ட ஆசாமியை ராஜஸ்தானில் சிபிசிஐடி சைபர் கிரைம் தனிப்படை கைது செய்தது.
    Author By Thenmozhi Kumar Mon, 14 Sep 2026 21:26:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cyber Crime Bust: Rajasthan Man Arrested for TN Chief Minister Fake AI Deepfake Video

    தமிழ்நாடு முதலமைச்சரின் உருவத்தைப் போலியாகச் சித்தரித்து, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக இந்தி ஆடியோ இணைக்கப்பட்ட ஆபத்தான டீப் பேக் வீடியோக்களை முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உலவவிட்டுப் பல மாநில மக்களிடம் கோடிக்கணக்கில் நிதி மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை, ராஜஸ்தான் மாநிலத்தின் உட்பகுதியில் புகுந்து தமிழ்நாடு சிபிசிஐடி சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.

    தமிழ்நாடு சிபிசிஐடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கமாக மேற்கொள்ளும் இணையவழி ரோந்து மற்றும் தீவிர கண்காணிப்புப் பணியின் போது, முகநூலில் ஒரு திடுக்கிடும் வீடியோ உலா வருவது கண்டறியப்பட்டது. அதில், தமிழ்நாடு முதலமைச்சர் பேசுவது போன்ற அதிநவீன டீப் பேக் காட்சிகளும், அதற்குப் பின்னணியில் இந்தி மொழியில் உருவாக்கப்பட்ட செயற்கை குரல்வடிவமும் கச்சிதமாக இணைக்கப்பட்டிருந்தன. அப்பாவி பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் உள்நோக்கத்தோடு பரப்பப்பட்ட அந்த வீடியோக்களில், அரசிடமிருந்து நேரடி நிதி உதவி பெற உடனடியாக இந்த குறிப்பிட்ட வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளவும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இச்சம்பவம் குறித்து சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவு உடனடியாக வழக்குப்பதிவு செய்து கள விசாரணையில் இறங்கியது. விசாரணையில், இத்தகைய ஏஐ வீடியோக்களை சமூக வலைதளங்களில் விளம்பரமாகப் பரவவிட்டு, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அப்பாவிகளிடம் குறிப்பிட்ட கும்பல் பெருமளவில் பணம் பறித்து மோசடி செய்திருப்பது வெட்டவெளிச்சமானது. இதனையடுத்து, இணையச் சேவை நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் அந்த நச்சு வீடியோக்களை உடனடியாக நீக்கிய சிபிசிஐடி அதிகாரிகள், டிஜிட்டல் தடயங்கள், ஐபி முகவரிகள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகளைத் துல்லியமாக ஆய்வு செய்து குற்றவாளிகள் பதுங்கியிருந்த இடங்களை அடையாளம் கண்டனர்.

    இதையும் படிங்க: ஆன்லைன் முதலீட்டு மோசடி..! கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிய பகீர் பின்னணி.. காவல்துறை எச்சரிக்கை.!

    arrest

    இதனைத் தொடர்ந்து, டிஜிபி உத்தரவின் பேரில் ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு இரண்டு தனிப்படைகள் மின்னல் வேகத்தில் விரைந்தன. அங்குள்ள உள்ளூர் மாநிலக் காவல்துறையின் முழு ஒத்துழைப்புடன் ஆல்வார் மாவட்டத்தின் தொலைதூர உட்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில், முக்கியக் குற்றவாளியான ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம், லட்சுமண்கர் வட்டம், பூந்தோலி கிராமத்தைச் சேர்ந்த ஜஹூர் கானின் மகன் ஷயாபு கான் (28) என்பவரைப் போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். அவரிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட அதிநவீன செல்போன்கள், போலி சிம் கார்டுகள் மற்றும் ஏஐ மென்பொருட்கள் அடங்கிய சிபியு உள்ளிட்ட மின்னணு சாதனங்களைப் பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ஷயாபு கானை பி.டி. வாரண்ட் மூலம் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்த சிபிசிஐடி போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். மேலும், மத்தியப் பிரதேசத்தில் இந்த நபரிடம் ஏமாந்து லட்சங்களை இழந்த பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை அடையாளம் கண்ட தனிப்படையினர், அவரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலம் மற்றும் ஆதாரங்கள் மூலம் இவ்வழக்கை மிக வலுவாகக் கட்டமைத்துள்ளனர். 

    இதனிடையே, தமிழக முதலமைச்சரின் இத்தகைய போலி டீப் பேக் வீடியோக்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் சில முகநூல் கணக்குகளிலிருந்தும் திட்டமிட்டுப் பகிரப்பட்டு வருவது விசாரணையில் உறுதியாகியுள்ளது. இதன் பின்னணியில் சர்வதேச சைபர் கிரைம் மாஃபியா நெட்வொர்க் ஏதேனும் செயல்படுகிறதா என்பது குறித்தும், வெளிநாட்டு சதிகாரர்களுக்கு உள்ளூரில் உடந்தையாக இருந்த ஏஜெண்டுகள் யார் என்பது குறித்தும் தமிழ்நாடு சிபிசிஐடி சைபர் பிரிவு விரிவான சர்வதேச டிஜிட்டல் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: உயர்கல்வியை வணிகமயமாக்கும் தனியார் பல்கலைக்கழக சட்டம்! ரத்து செய்ய சீமான் ஆவேச முழக்கம்!

    மேலும் படிங்க
    பெரியார் கொள்கை எனக்கூறிவிட்டு ஊர்வலத்திற்கு தடையா? தவெக அரசை விளாசிய கி.வீரமணி!

    பெரியார் கொள்கை எனக்கூறிவிட்டு ஊர்வலத்திற்கு தடையா? தவெக அரசை விளாசிய கி.வீரமணி!

    தமிழ்நாடு
    உயர்கல்வியை வணிகமயமாக்கும் தனியார் பல்கலைக்கழக சட்டம்! ரத்து செய்ய சீமான் ஆவேச முழக்கம்!

    உயர்கல்வியை வணிகமயமாக்கும் தனியார் பல்கலைக்கழக சட்டம்! ரத்து செய்ய சீமான் ஆவேச முழக்கம்!

    தமிழ்நாடு
    சில்வர்ஸ்டோன் கார் பந்தயம்! அஜித்துடன் இணைந்த வீடியோவை குறும்படமாக பகிர்ந்த முதல்வர் விஜய்!

    சில்வர்ஸ்டோன் கார் பந்தயம்! அஜித்துடன் இணைந்த வீடியோவை குறும்படமாக பகிர்ந்த முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    வானில் அரிய விண்வெளி அதிசயம்! பிறை நிலவு அருகே ஜொலித்த வெள்ளி கிரகம்!

    வானில் அரிய விண்வெளி அதிசயம்! பிறை நிலவு அருகே ஜொலித்த வெள்ளி கிரகம்!

    தமிழ்நாடு
    2 தொகுதியிலும் அதிமுக தான் வெல்லும்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நம்பிக்கை!

    2 தொகுதியிலும் அதிமுக தான் வெல்லும்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நம்பிக்கை!

    தமிழ்நாடு
    தாவியதும் சீட் தருவது அப்பட்டமான குதிரை பேரம்: தாராபுரத்தில் திமுக சாமிநாதன் காட்டம்!

    தாவியதும் சீட் தருவது அப்பட்டமான குதிரை பேரம்: தாராபுரத்தில் திமுக சாமிநாதன் காட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share