தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் ஆகஸ்ட் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
மத்திய அரசு மேற்கொள்ள உத்தேசித்துள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கைகள் மற்றும் அதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து விவாதிப்பதற்காக இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய், தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் வாயிலாக அழைப்பிதழ்களை அனுப்பியிருந்தார்.

இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, மநீம உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்தன. தற்போது முதல்வர் விஜய் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பா சிதம்பரம், மாணிக்கம் தாகூர், திருமாவளவன், துரை வைகோ, ஜோதிமணி, விஜய் வசந்த், விஷ்ணு பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை...! தமிழக எம்பிக்களுடன் முதல்வர் விஜய் ஆகஸ்ட் 8-ல் அவசர ஆலோசனை!
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா கட்சி வேலை தொடர்பாக சிக்மங்களூரில் உள்ளதால் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பல கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்து உள்ள நிலையில் தொகுதி மறு வரையறையால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் விசிக மதிமுக கம்யூனிஸ்ட் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிங்க: ராகுல்-கிரண் ரிஜிஜு அவசர சந்திப்பு... முக்கிய மசோதாக்களில் உடன்பாடு எட்டப்படாததால் மீண்டும் முடங்கும் நாடாளுமன்றம்!