வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு ›

#BREAKING வேதாரண்யத்தை நெருங்கும் டிட்வா… நள்ளிரவு முதல் நாளை மாலை வரை காத்திருக்கும் தரமான சம்பவம்…! 

சென்னையில் இருந்து 380 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது டிட்வா புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள டிட்வா புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. அதாவது காலையில் நகர்ந்த அதே வேகத்தில் தான் தற்பொழுது டிட்வா புயலானது நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

குறிப்பாக காரைக்காலில் இருந்து 170 கிலோமீட்ட தொலைவிலும் புதுச்சேரியிலிருந்து 280 கிலோ மீட்டர் தொலைவிலும் சென்னையிலிருந்து 380 கிலோ மீட்டர் தொலைவிலும் தற்பொழுது இந்த புயலானது மையம் கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

வேதாரண்யத்தில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு 380 கிலோமீட்ட தொலைவிலும் இந்த புயலானது தற்பொழுது நகர்ந்து வருவதாக இந்திய வாநிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தொடர்ந்து இந்த புயலானது வடக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளைக்கு அதிகாலை வட தமிழ்நாடு,புதுச்சேரி அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர பிரதேச கடற்கரைக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை வந்தடையும் என கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகாக இன்று நள்ளிரவு  முதல் நாளை மாலைக்குள் முறையே தமிழ்நாடு கடற்கரையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்தது 60 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் புயல் மையம் கொண்டிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: “ஒருவேளை உணவு கூட இல்ல…” – கொழும்புவில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்… அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

ஏற்கனவே புயல் காரணமாக வட கடலோர பகுதிகளில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வரக்கூடிய நிலையில்,  நாளை புதுச்சேரி மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தற்போதைக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்துட்டு வருகிறது. புயலானது சென்னையில இருந்து சுமார்380 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருக்கக்கூடிய நிலையில், மேகக்கூட்டங்கள் தமிழகத்தை நோக்கி வருவதால் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 

சென்னை, திண்டுக்கல், கடலூர், மயிலாடுதுறை, மதுரை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவள்ளூர், விள்ளுப்புரம், தஞ்சை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிட்வா புயல் காரணமாக வடகடலோர பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்றும்,  மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல  வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 

இதையும் படிங்க: இலங்கையை கலங்க வைத்த இயற்கை… ஒரு கிராமமே மண்ணில் புதைந்த சோகம்… 100க்கும் மேற்பட்டோர் பலி…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी