மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்து, அதன் திட்டப் பணிகளை சீர்குலைத்து, நிதி ஒதுக்கீட்டை குறைப்பது, மாநிலங்களின் நிதிச்சுமையை அதிகரித்து திட்டத்தை முடக்குவது உள்ளிட்ட வேலைகளை மத்திய பாஜக அரசு செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வேலைநாட்களை குறைப்பது, பயனாளிகளின் எண்ணிக்கையை குறைப்பது, கிராமங்கள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு' என்ற அண்ணல் காந்தியடிகளின் பெயரை நீக்குவது, இந்தியை திணிப்பது என சட்டத்தை திருத்தியும் நூறு நாள் வேலையையே இனி இல்லாமல் செய்து கிராம மக்களின் வாழ்வாதாரத்தில் அடிக்கத் துடிக்கும் மத்திய பாஜக அரசின் நாசகார சதிச் செயலையும் அதற்கு ஒத்து ஊதி தமிழ்நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்யும் அ.தி.மு.கவையும் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக திமுக அறிவித்தது.

நாடாளுமன்றத்திலும் 100 நாள் வேலை திட்டம் தொடர்பான பிரச்சினையை எழுப்பி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இருப்பினும் எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் 100 நாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி… தமிழ்நாட்டுக்கு முன்னோட்டம்… செல்வப் பெருந்தகை பெருமிதம்…!
100 நாள் வேலை இனி இல்லை என முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, சண்முகம், வீரபாண்டியன் உள்ளிட்ட தலைவர்களும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிங்க: ஸ்வயம் தேர்வுக்கு தமிழ்நாட்டிலேயே சென்டர்கள்... அநீதி தடுக்கப்பட்டதாக MP சு.வெங்கடேசன் பெருமூச்சு...!