தமிழகத்தில் ஒரு மாயையான ஆட்சி நடைபெற்று வருகிறது மேலும் முதலமைச்சர் விஜய் முதலமைச்சர் காண எந்த தகுதியும் இன்றி என்றும் நடிகராகவே வலம் வருகிறார் என தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் இதனை தெரிவித்தார்
தூத்துக்குடி மாநகர போல் பேட்டை பகுதி திமுக சார்பில் செயற்குழு கூட்டம் தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் கலந்து கொண்டு திமுகவின் வளர்ச்சி குறித்தும் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றுவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கினார் .
இதைத்தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், “ மக்களிடம் ஒரு மாயையை ஏற்படுத்தி விஜய் ஆட்சியைப் பிடித்தவர். தற்போது ஒரு மாயை ஆட்சியவே நடத்தி வருகிறார்கள். இந்த மாயையை உடைக்கும் வகையில் நாம் பணியாற்ற வேண்டும். அது மட்டும் இன்றி இந்த ஆட்சி கட்டை கால் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. முழு மெஜாரிட்டி கிடைக்காத காரணத்தால் நம் கூட்டணியில் வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,கம்யூனிஸ்டுகளின் ஆதரவுடன் தற்போதும் சொந்த காலில் இல்லாமல் கட்டை காலில் தான் விஜய் ஆட்சி நடத்தி வருகிறார் .
இதையும் படிங்க: முதல்வர் விஜய்தான் களவாணி..! “இரவல் ஆட்சி”..! சிதைந்து போன திமுக… EPS கடும் தாக்கு..!!
தமிழகம் இந்த அளவிற்கு முன்னேறி உள்ளது என்றால், அதற்கு காரணம் திமுக தான். சமூக நீதி மற்றும் எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆட்சி நடத்தியதின் காரணமாக தான் தமிழகம் முன்னேறி உள்ளது. ஆனால் முதல்வர் விஜய் தீய சக்தி தூர்ந்து போன சக்தி என கூறி கூறுகிறார். ஆனால் அவர் கட்சியில் போய் இணைந்தால் அவர்கள் தூய சக்தியாக மாறிவிடுவார்களாம். எப்படி மாற முடியும்?. இதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
உங்களின் ஏமாற்று வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விஜய் முதலமைச்சர் ஆகி உள்ளார். ஆனால் முதலமைச்சர் காண எந்த தகுதியும் விஜய்க்கு இல்லை, இன்னும் நடிகராக தான் உள்ளார்.அண்மையில் பேசிய பேச்சை பார்த்தால் சினிமாவில் பேசிய வசனத்தை தான் பேசி வருகிறார். முதல்வர் விஜய் பேசி வரும் பேச்சில் மனித மாண்பு என்பதை இல்லாத ஒரு நிலை தான் உள்ளது என தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் திமுக குறித்தும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் குறித்து அநாகரிகமாக பொய்களை பேசி வரும் முதல்வர் விஜய்க்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின் பகுதி செயலாளர் ஜெயக்குமார் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி மாநகர அவைத்தலைவர் ஜேசுதாஸ் மாநகர துணை செயலாளர்கள் கீதா முருகேசன், முரளிதரன், பிரமிளா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஆட்சி மாறினாலும் கஞ்சா புழக்கம் குறையவில்லை! எண்ணூர் சம்பவத்தை சுட்டிக்காட்டி வானதி சீனிவாசன் கண்டனம்!