• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, July 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழகத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வரும் 2031-க்குள் 20,000 பொது EV சார்ஜிங் நிலையங்களை அமைக்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 14 Jul 2026 20:43:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Targets 20,000 EV Charging Stations by 2031 Under Mega Infrastructure Drive.

    தமிழகத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை உச்சத்திற்குக் கொண்டு செல்லவும், சுற்றுச்சூழல் மாசற்ற பசுமைப் போக்குவரத்தை உறுதி செய்யவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வெற்றி தமிழகம் தொலைநோக்குப் பார்வையின் கீழ் ஒரு பிரம்மாண்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 2031-ஆம் ஆண்டிற்குள் மாநிலம் முழுவதும் 20,000 பொது மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்களை அமைக்கத் தமிழக அரசு அதிரடியான கொள்கை முடிவுகளை எடுத்து வருகிறது.

    இதன் முதற்கட்டமாக, கடந்த 13.07.2026 அன்று தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, 14.07.2026 அன்று தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் (TNPDCL) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தலைமையில், ITDP India மற்றும் Guidance Tamil Nadu அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற உயர்மட்ட தொழில்நுட்பக் குழுக்கூட்டம் அரங்கேறியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில் மின்வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பைப் போர்க்கால அடிப்படையில் விரைவுபடுத்துவதற்கான பல்வேறு திருப்புமுனை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

    EV Charging Station

    இந்த உயர்மட்டக் கூட்டத்தின் ஆகப்பெரும் முக்கிய முடிவாக, ஏற்கனவே புழக்கத்தில் உள்ள உயரழுத்த மற்றும் அதிஉயரழுத்த மின் இணைப்புகளின் அனுமதிக்கப்பட்ட மின் சுமை வரம்பிற்குள்ளேயே, புதிய EV சார்ஜிங் வசதிகளுக்குத் தனியாக ஒரு 'துணை மின் மீட்டர்' அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்கீம் மூலம், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி பார்க்குகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் இனி தனியாக ஒரு புதிய மின் இணைப்பு பெற வேண்டிய அவசியமில்லை.

    இதையும் படிங்க: மீனவர்களுக்கு ரூ.20,000 நிவாரணம்? தவெக அரசுக்கு உத்தரவிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு!

    EV Charging Station

    மிக முக்கியமாக, இந்த துணை மின் மீட்டர்களுக்கு எவ்விதமான நிலைக்கட்டணமோ அல்லது குறைந்தபட்ச மாதாந்திர கட்டணமோ விதிக்கப்படாது என்பதால், நுகர்வோர்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். அவர்கள் மின் வாகன மின் கட்டணத்தின் கீழ் தங்களது மின்பயன்பாட்டுக்கான யூனிட் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. கூடுதல் மின் உள்கட்டமைப்புச் செலவுகள் எதுவும் இன்றி, மிகக் குறைந்த முதலீட்டிலேயே விரைவாகச் சார்ஜிங் நிலையங்களை உருவாக்க இந்த அம்சம் வழிவகுக்கும். அதேவேளையில், தங்களுக்குத் தேவைப்படும் இடங்களில் தற்போதைய மின் சுமை மற்றும் கட்டணப் பிரிவில் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், மின்வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பிற்காக தனியாக ஒரு புதிய மின் சேவை இணைப்பைப் பெற்றுக் கொள்ளும் மாற்று வசதியும் நுகர்வோருக்கு தாராளமாக வழங்கப்படவுள்ளது.

    மேலும், மாநிலத்தில் மின்வாகனச் சார்ஜிங் உள்கட்டமைப்புக்கான முதலீடுகளைக் காந்தம் போல ஈர்க்கும் நோக்கில், 'தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2023'-ல் சில அதிரடி திருத்தங்களை மேற்கொள்ள அரசுக்குப் பரிந்துரைக்கவும் இக்கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழில்முனைவோர்கள் மற்றும் தனியார் முதலீட்டாளர்களைப் பெருமளவில் ஊக்குவிக்கும் வகையில், பிரத்யேக மின் வாகன சார்ஜிங் நிலையங்களுக்கான (EV Charging Station) தனித்துவமான மின் கட்டணப் பிரிவில் தற்போது நடைமுறையில் உள்ள நிலைக்கட்டணம் அல்லது குறைந்தபட்ச மாதாந்திர கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்யவோ அல்லது அதனை மிகக் கணிசமாகக் குறைக்கவோ அரசுக்குப் பரிந்துரைக்கப்படவுள்ளது.

    இந்த அதிரடி நடவடிக்கைகள் அனைத்தும், சார்ஜிங் நிலையங்களை அமைப்பதில் உள்ள ஆரம்பகட்ட முதலீட்டுத் தடைகளைத் தகர்த்தெறிந்து, தனியார் முதலீடுகளை வெள்ளமெனக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 2031-க்குள் 20,000 பொது EV சார்ஜிங் நிலையங்கள் என்ற தமிழக அரசின் இலக்கு எட்டப்படுவதோடு, இந்தியாவின் பசுமைப் போக்குவரத்து மற்றும் சுத்தமான எரிசக்தி பயன்பாட்டில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழும் என கூடுதல் இயக்குநர் (ம.தொ.), தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தஞ்சை நெல் மூட்டை விபத்தில் பெண் பலி! முதல்வர் விஜய் 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிப்பு!

    மேலும் படிங்க
    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    இங்கிலாந்தை 258 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா! முதல் ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் இலக்கு!

    இங்கிலாந்தை 258 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா! முதல் ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் இலக்கு!

    கிரிக்கெட்
    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    தமிழ்நாடு
    "பாஜகவின் வலுவான தூண் சாய்ந்தது!" ராமச்சந்திர கவுடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

    "பாஜகவின் வலுவான தூண் சாய்ந்தது!" ராமச்சந்திர கவுடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

    இந்தியா

    செய்திகள்

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு

    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    தமிழ்நாடு

    "பாஜகவின் வலுவான தூண் சாய்ந்தது!" ராமச்சந்திர கவுடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

    இந்தியா
    55 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை! புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை!

    55 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை! புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share