தமிழக வெற்றி கழகம் தேர்தல் பிரச்சாரத்தில் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்று பயிர் கடன் தள்ளுபடி. ஐந்து ஏக்கருக்குக் கீழ் உள்ள விவசாயிகளுக்கு முழு தள்ளுபடி, அதற்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீத தள்ளுபடி என்று அறிவித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அந்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
முழுமையான கடன் தள்ளுபடிக்குப் பதிலாக சில லட்சம் விவசாயிகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட தொகையை அறிவித்ததால், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. ஈரோடு, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் விவசாய அமைப்புகள் திரண்டு ஆட்சியர்கள் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் விவசாயிகளின் ரத்தத்தை உறிஞ்சும் ஊழல் ஆட்சி என தமிழக வெற்றி கழகத்தை திமுக விமர்சித்து உள்ளது. லஞ்சம் கேட்டால், இது விஜய் ஆட்சி என்று சொல்லுங்கள் எனச் சினிமா வசனம் பேசிய டம்மி முதல்வர் விஜய்யின் ஆட்சியில், நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் மெகா ஊழலுக்கு திருவாரூர் விவசாயிகளின் கண்ணீர் போராட்டமே நேரடி சாட்சி எனவும் கூறியுள்ளது.
இதையும் படிங்க: பாடகர் அறிவுவின் அதிரடி போராட்டம்... கைதுக்குப் பிறகு முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு..!!
விவசாயிகளின் வியர்வையில் விளைந்த நெல்லுக்கு, மூட்டைக்கு ரூ.76 முதல் ரூ.120 வரை பகிரங்கமாக லஞ்சம் கேட்கப்படுகிறது; தர மறுத்தால் கொள்முதல் செய்ய மறுக்கிறார்கள் என்றும் இந்த லஞ்சப் பணம் மேலிடம் வரை செல்கிறது என்று நெஞ்சழுத்தமாகச் சொல்லி விவசாயிகளிடம் பகல் கொள்ளையடிக்கிறது தவெக அரசு எனவும் கூறப்பட்டுள்ளது. விவசாயக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டதோடு மட்டுமின்றி, இன்று லஞ்சப் பட்டியலோடு விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீருடன் கையேந்த வைத்துள்ளது இந்தச் சீர்கெட்ட நிர்வாகம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதையும் படிங்க: நெல் மூட்டைக்கும் லஞ்சம்..! எடை முறைகேடுகள்... முதல்வர் விஜயை வெளுத்த TTV தினகரன்..!