திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வீராச்சாமி மகன் திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ஐ பெரியசாமி, சக்கரபாணி, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஐபி செந்தில்குமார், காந்திராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த திருமண நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், "துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆசியோடு இந்த திருமண விழா நடந்துள்ளது.இந்த திருமண நிகழ்ச்சிக்கு தற்போது இருக்கின்ற அரசியல் நெருக்கடியில் துணை முதலமைச்சர் அழைக்கலாம் என வீராச்சாமிக்கு நாங்கள் கூறினோம்.
நாம் தேதி கேட்டதும் உடனடியாக தேதி கொடுத்தார். நமது மாவட்டத்திற்கு நமது மக்களுக்கு பெருமை சேர்த்தவர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். முதலமைச்சர் திருமணத்திற்கு டைரியை பார்த்து நேரம் கொடுப்பார். துணை முதலமைச்சர் டைரியை பார்க்கவில்லை. உடனடியாக தேதி கொடுத்தார்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி மேல ஏன் பழி போடுறீங்க? என்ன நடந்துச்சு பாத்தீங்களா... கே.எஸ் அழகிரி விளக்கம்!
சுழன்று, சுழன்று எல்லா பணிகளையும் செய்தாலும் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டது பெருமை என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கருணாநிதியிடம் தேதி கேட்க சென்றால், முதலில் தேதி கொடுப்பதற்கு பதில் திருமண தேதியை கேட்பார். மறுமுறையும் அவரிடம் கேட்க வேண்டும். யாராக இருந்தாலும் இரண்டாவது முறை கேட்க வேண்டும்.
முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நூற்றுக்கணக்கான திருமணங்கள் இந்த மாவட்டத்தில் நடத்தி வைத்துள்ளனர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே எளிமையான முதலமைச்சர் மக்களோடு மக்களாக கலந்திருக்கும் துணை முதலமைச்சரை நம்மால் பார்க்க முடியாது. அதுதான் திமுக.
சாமானியர்களை மதித்து சாமானியர்களுக்கு அரசியல் அரங்கத்தில் பதவிகள் மட்டுமல்லாமல், பட்டங்கள் மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்துடன் இணைந்து இருக்கக்கூடிய ஒரே இயக்கம் திமுக. அதை யாரும் மறுக்க முடியாது.
இங்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இருக்கிறார். காங்கிரசில் பெரிய தலைவர்கள் இது போன்ற நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்றால் பணக்காரர்களுக்கு மட்டுமே வருவார்கள். அவர்களைக் குறைத்துக் கூறவில்லை. திமுக இயக்கத்தை பொறுத்தவரையில் சாமானியர்களை உயர்த்தி பிடித்து மதிப்பளிக்கக்கூடிய இயக்கம் நமது இயக்கம்.
பணத்தால் செல்வத்தால் நாம் உயரவில்லை. திமுகவால் தான் உயர்ந்துள்ளோம். அமைச்சராக இருக்கிறோம்.கருணாநிதி பெரியார் அண்ணா முதலமைச்சர் ஸ்டாலின் எத்தனை நபர்களை உயர்த்திப் பார்த்துள்ளனர். அதுதான் இந்த இயக்கத்துடைய சிறப்பு. சமூக அமைப்பில் ஊடுருவி இருக்கக்கூடிய அமைப்பு திமுக.
எந்த இயக்கமும் வர முடியாது தமிழ்நாடு வரலாற்றில் திமுக சமமாக எந்த இயக்கமும் வர முடியாது. கடின உழைப்பு இருந்தால் எல்லோரும் வாழ்க்கையில் உயர முடியும். அந்த வகையில் வீராச்சாமி இருக்கிறார்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாவம் அவருக்கு அரசியல் தெரியல... EPS குறித்து செல்வப் பெருந்தகை விமர்சனம்...!