திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசு 2026 மார்ச் மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்திய வெளிநாட்டுப் பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த மசோதாவின் தொலைநோக்கு தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, தொடக்கம் முதலே திமுக இதை எதிர்த்து வருவதாகவும், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் நடப்பு மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மசோதா, வெளிநாட்டு நிதி பெறும் அமைப்புகளின் பதிவு ரத்து செய்யப்பட்டாலோ, சரணடையப்பட்டாலோ அல்லது புதுப்பிக்கப்படாமல் காலாவதியானாலோ, அந்த அமைப்புகளின் வெளிநாட்டு நிதி மற்றும் அதன் மூலம் உருவாக்கப்பட்ட சொத்துகளை மேற்பார்வை செய்ய, நிர்வகிக்க மற்றும் அகற்ற ஒரு நியமிக்கப்பட்ட அதிகார அமைப்பை உருவாக்க முன்மொழிகிறது. பதிவு காலாவதியானதும் தானாகவே நின்றுவிடும் என்ற விதியும் இதில் உள்ளது. மத்திய அரசு இதை வெளிநாட்டு நிதி தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், தேசிய நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கொண்டு வந்ததாகக் கூறுகிறது. அதேசமயம், சில தண்டனைகளை குறைப்பதும், விசாரணைகளுக்கு முன் மத்திய அனுமதி பெற வேண்டும் என்பதும் இதில் இடம்பெற்றுள்ளன.எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இதை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

பதிவு இழந்தவுடன் பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட சொத்துகளை அரசு கைப்பற்றும் வாய்ப்பு உள்ளதாகவும், இது குறிப்பாக கிறித்தவ மற்றும் பிற சிறுபான்மை தொண்டு நிறுவனங்களை பாதிக்கும் என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர். மதச் சுதந்திரம், சிறுபான்மையினரின் கல்வி மற்றும் சமூக நலன் தொடர்பான அரசியலமைப்பு உரிமைகளை இது பாதிக்கும் என்ற அச்சமும் எழுப்பப்படுகிறது.இந்தப் பின்னணியில், சிறுபான்மையினர் கூட்டு நடவடிக்கை மன்றத்தின் பிரதிநிதிகள், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் தலைமையில், பல்வேறு மதப் பிரிவுகளின் தலைவர்களுடன் சேர்ந்து மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்தனர்.
இதையும் படிங்க: "மேகதாது விஷயத்தில் விஜய் கப்சிப்"..! இதுக்கு மட்டும் மீட்டிங்கா..? அனைத்துக் கட்சிக் கூட்டத்தை விளாசிய கனிமொழி.!
அந்தச் சந்திப்பில் மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் அல்லது தற்போதைய வெளிநாட்டுப் பங்களிப்புச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளை மறுஆய்வு செய்து நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கோரினர்.திமுக தலைவர் இந்தக் கோரிக்கையை முழுமையாக ஆதரித்துள்ளார்.
இதையும் படிங்க: “தொகுதி மறுவரையறை போரில் முதல் பின்னடைவு? விஜய் கூட்டத்தில் முக்கிய கட்சிகள் ஆப்சென்ட்..!!