தமிழக அரசியலில் சமீப காலமாக திமுக தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு துறைகளின் சோதனைகள் அதிகரித்துள்ளன. இவை பெரும்பாலும் லஞ்ச ஒழிப்புத் துறை, மத்திய குற்றப்பிரிவு போன்றவற்றால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய நடவடிக்கைகள் அரசியல் ரீதியான பழிவாங்கல் என்றும், சட்டப்பூர்வமான விசாரணை என்றும் இருதரப்பிலும் கருத்துகள் எழுப்பப்பட்டு வருகின்றன. திமுக தரப்பு இதை அரசியல் நோக்கத்துடன் செய்யப்படுவதாகக் குற்றம் சாட்டி வருகிறது.
அதேநேரம், அரசுத் தரப்பு இவை சட்டப்படி நடைபெறும் விசாரணைகள் எனக் கூறுகிறது. ஜூன் மாதம் முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீடு, திருவண்ணாமலையில் உள்ள குடியிருப்பு மற்றும் அவரது கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றது. நெடுஞ்சாலைப் பணிகளில் முறைகேடு நடந்ததாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் புகார்கள் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையின் போது ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. செப்டம்பர் தொடக்கத்தில் முன்னாள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு தொடர்பான இடங்களில் மீண்டும் பெரிய அளவிலான சோதனை நடந்தது. அதற்குப் பிறகு செப்டம்பர் நடுப்பகுதியில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்பான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் இறங்கினர். திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட சென்னை மற்றும் திருச்சியில் உள்ள பல இடங்களில் அதிகாலை முதல் சோதனை தொடங்கியது. இந்த தொடர்ச்சியான சோதனைகள் திமுக வட்டாரத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: வீரமணியை காப்பாற்ற முயன்ற எவரும் தப்ப கூடாது! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேச அறிக்கை!
இன்று திருவண்ணாமலை திமுக MP சி. என். அண்ணாதுரை வீட்டில் ரெய்டு நடந்து வருகிறது. அண்ணாதுரைக்கு சொந்தமான 10 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் 2 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர். சி.என். அண்ணாதுரை திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியின் உறுப்பினராகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அவர் தொழிலதிபராகவும், மாவட்ட அளவிலான கட்சிப் பொறுப்புகளில் இருப்பவராகவும் அறியப்படுகிறார்.
இதையும் படிங்க: அறிக்கை தாக்கல் கூடவா தெரியாது.? டம்மிகளின் டாடியா.? வீரமணி விஷயத்தில் தவெக தாக்கு..!!