திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், கழக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் வரும் அக்டோபர் 17-ஆம் தேதி சனிக்கிழமையன்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாகத் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள தலைமைக் கழக அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் கழக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் 17-10-2026 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், 'முரசொலி மாறன் வளாகத்தில்' உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.

அப்போது, கழகத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் எவ்விதத் தவறுதலுமின்றி குறித்த நேரத்தில் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: என்ன ஆச்சு?... திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் உடன் பிறப்புகள்...!
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின்கொள்முதல் சர்ச்சை, விலைவாசி உயர்வு விவகாரங்கள், டெல்லியில் நடைபெற்று வரும் அரசியல் நகர்வுகள் மற்றும் நாடாளுமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் திமுக எம்பிக்களுடன் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் விரிவாக ஆலோசனை நடத்துவார் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: கருத்துக்கணிப்புகள் குருட்டுக் கணக்கு! முதல்வர் விஜய்யின் பிரச்சாரம் குறித்து துரைமுருகன் காட்டம்!