தலைநகர் சென்னையில் மீண்டும் ஒரு கொடூர கொலை அரங்கேறியிருப்பது கடும் அதிர்ச்சி அளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘கடன் தொல்லை கொடுக்கிறார்கள்’ என பாதுகாப்பு கேட்ட பிரதீப்ராஜ் என்ற இளைஞரை, ‘உயிரோடு இருக்க மாட்டாய். பொய் கேஸ் போட்டு உள்ளே தள்ளுவேன்’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக அந்த இளைஞரே நேற்று முன்தினம் வீடியோ வெளியிட்டிருந்தார்.
அதன் மறுநாளே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் உதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.கொலைக்கு ஒரு நாள் முன்பு பிரதீப்ராஜ், ‘சிஎம்-கிட்ட வேணும்னா போய் சொல்லு. என்னை ஒண்ணும் பண்ண முடியாது’ என்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் சொன்னதாகக் கூறியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வரை காவல்துறையினரே டம்மி சிஎம் ஆக நினைக்கிறார்களா என்று கேள்வி எழுப்பினார் உதயநிதி ஸ்டாலின்.

காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டால் கொலை செய்யப்படுவார்கள் என்ற புதிய வரலாற்றை இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் என்று அவர் குற்றஞ்சாட்டினார். சட்டமன்றத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால், ‘1974-இல் என்ன நடந்தது தெரியுமா, ஈடி என்ன பண்ணுச்சு தெரியுமா’ என்று திசை திருப்பும் முதலமைச்சர், இந்தக் கொலைக்கு என்ன பதில் வைத்திருக்கிறார் என்றும் கேட்டார்.
இதையும் படிங்க: தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்! திமுக வேட்பாளராக சேது செல்வம் அறிவிப்பு!
இந்த வழக்கில் திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்வதோடு, சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார். தலைநகரில் மீண்டும் ஒரு கொலை நடக்காமல் இருப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: இரண்டு தொகுதியும் வெல்வது என் பொறுப்பு! உதயநிதியின் அட்டாக் மோட் திட்டம்! திமுக வேட்பாளர்கள் அறிவிப்பின் பின்னணி!