அமெரிக்காவில் தங்கி பணி புரிந்து வரும் வெளிநாட்டை சார்ந்தவர்களுக்கு எச்ஒன்பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசா மூலம் ஏராளமான இந்தியர்கள் அமெரிக்காவில் பணி புரிந்து வருகின்றனர். இந்த விசாக்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் 71 சதவீத்துடன் இந்தியா முதலிடத்திலும் 11.7 சதவீதத்துடன் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
அமெரிக்கா வழங்கிய அனைத்து எச்ஒன்பி விசாக்களில் ஐந்தில் ஒரு பங்கை இந்திய வம்சாவளியைச் சேந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் பெற்றுள்ளன. இதில் இன்போசிஸ் மற்றும் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. ஏப்ரல் செப்டம்பர் 2024 காலகட்டத்தில் வெவ்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட மொத்தம் 1.33 லட்சம் எச்ஒன்பி விசாக்களில் சுமார் 2,476 விசாக்கள் இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட எச்ஒன்பி விசாக்களை மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா நிறுவனங்கள் தலா 5,000 வீதம் பெற்று வெளிநாட்டினரை பணிக்கு அமர்த்தியுள்ளது.
இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் எச்ஒன்பி விசா மூலம் பணியாளர்களை நியமிப்பதில் முறைகேடு செய்துள்ளனர் என்று அமெரிக்கா கூறி வருகிறது. இந்நிலையில் இந்த விசா மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விசாவுக்கான ஆண்டு கட்டணத்தை ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாயிலிருந்து 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி உள்ளதாக வெள்ளை மாளிகையின் செயலாளர் வில் காப் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கண்ணீர் விட்டு காரியத்தை சாதித்த துரை வைகோ... திமுக சதி வலையில் இருந்து தப்பிய மதிமுக...!
ட்ரம்பின் இந்த அதிரடி உத்தரவால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன் அமெரிக்காவில் வேலை பார்க்க வேண்டும் என்ற இந்தியர்களின் கனவும் தகரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க வர்த்தக செயலாளர் கோவட் லுட்டினிக் எச்ஒன்பி விசாக்களுக்கான ஆண்டு கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து அனைத்து பெரிய நிறுவனங்களுக்கும் விளக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எச்ஒன்பி விசாவுக்காக ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களை செலவழித்து வெளிநாடுகளிலிருந்து ஊழியர்கள் அழைத்து வருவதற்கு பதிலாக அமெரிக்க பல்கலை கழகங்களிலிருந்து வரும் இளம் பட்டதாரிகளுக்கு பயிற்சி கொடுத்து வேலைவாய்ப்பை உருவாக்குமாறு நிறுவனங்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: சுற்றுப்பயணத்திற்கு சூறாவளியாய் புறப்பட்ட விஜய்... நாகையில் என்ன பேசப்போகிறார் தெரியுமா??