ஆக்சியம்-4 விண்வெளி திட்டம், நாசா, ஆக்சியம் ஸ்பேஸ் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவை உள்ளடக்கிய ஒரு தனியார் விண்வெளி பயணம். இந்த திட்டம் 2025 ஜூன் 25 அன்று புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்தியாவின் மற்றொரு மைல்கல் பயணமாக, 1984இல் ராகேஷ் ஷர்மாவுக்குப் பிறகு விண்வெளிக்கு சென்ற இரண்டாவது இந்தியராக சுக்லா வரலாற்று இடம் பெற்றுள்ளார். மேலும் சுபான்ஷு முதல் இந்தியராக ISS-ஐ அடைந்தார். இந்த பயணம், NASA, SpaceX, மற்றும் Axiom Space இணைந்து நடத்திய தனியார் பயணம். இதற்கு இந்திய அரசு சுமார் ₹548 கோடி செலவு செய்தது.

ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம், கிரேஸ் என்ற டிராகன் விண்கலத்தில், ஜூன் 25, 2025 அன்று காலை 12:01 மணிக்கு புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து பயணம் தொடங்கியது. பின்னர் ஜூன் 26 அன்று மாலை 4:01 மணிக்கு சுபான்ஷு, ISS-இல் 14 நாட்கள் தங்கி, 60-க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டார். இந்த நிலையில், ஆய்வுகளை முடித்துக் கொண்டு டிராகன் விண்கலம் ISS-இலிருந்து மாலை 4:35 மணிக்கு பிரிந்து, பூமிக்கு புறப்பட்டது. இந்த நிலையில், விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாக டிராகன் விண்கலம் பூமியை வந்தடைந்தது. நேற்று விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட டிராகன் விண்கலம் அமெரிக்காவின் கலிபோர்னியா கடல் பகுதியில் தரை இறங்கியது. 22 மணி நேர பயணத்திற்கு பிறகு விண்கலம் பூமியை வந்தடைந்துள்ளது. சுபான்ஷூ சுக்லா உட்பட நான்கு பேர் பத்திரமாக தரையிறங்கியுள்ளனர். இதனிடையே விண்வெளி வீரர்கள் 7 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.