சென்னை, தமிழ்நாட்டின் பொருளாதார மையமாகவும், கலாச்சார தலைநகரமாகவும் விளங்கும் இந்த நகரம், இன்று போதைப் பொருள்களின் இருண்ட உலகத்தால் சூழப்பட்டிருக்கிறது. கடல் வழி வர்த்தகம், சாலை மற்றும் ரயில் பாதைகள், சர்வதேச விமான நிலையம் என இவை அனைத்தும் போதைக்கு ஏற்ற இலக்குகளாக மாறியுள்ளன. 2025-ஆம் ஆண்டு நவம்பர் வரை, சென்னை போலீஸ் மட்டுமே 1,516 NDPS சட்ட வழக்குகளைப் பதிவு செய்துள்ளது, 2.9 மெட்ரிக் டன் கஞ்சா மற்றும் 67,700 ஐட்ரிக் டேப்லெட்டுகளைப் பறிமுதல் செய்துள்ளது.
இந்தப் புழக்கம் வெறும் வர்த்தகமல்ல; இது இளைஞர்களின் வாழ்க்கைகளை அழிக்கும் ஒரு அச்சுறுத்தல். இதனை தடுக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். போதைப்பொருள் புழக்கம் என்பது மாத்திரைகள், சாக்லேட்டுகள் என பல வழிகளில் புழக்கத்தில் இருக்கிறது.

இந்த நிலையில், சென்னை அம்பத்தூர் அருகே அத்திப்பட்டியில் மளிகை கடையில் வைக்கப்பட்டிருந்த போதை சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மளிகை கடையில் வைத்திருந்த 2 கிலோ எடை கொண்டு 516 போதை சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், மளிகை கடை நடத்தி வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த கீதா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: வாலாட்டும் பாக்., பயங்கரவாதிகள்!! ஆப்ரேஷன் சிந்தூர் 2.0க்கும் தயார்!! ராணுவ ஜெனரல் ஆவேசம்!
போதை மாத்திரைகள் தொடர்பான ரகசிய தகவலின் பெயரில் சோதனை செய்து போதை சாக்லேட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். போதை சாக்லேட் எங்கிருந்து கிடைத்தது என்பது தொடர்பாக வட மாநில பெண்ணிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: அதிமுகவில் வாரிசு அரசியல்... எடப்பாடிக்கு பிறகு யார் என்பதை ஓபனாக சொன்ன விஜயபாஸ்கர்...!