ஆப்கானிஸ்தானை தலிபான் தலைமையிலான தீவிராவாதிகள் கைப்பற்றியபின் அந்த நாட்டுடனும் எந்திவிதமான தொடர்பும் இல்லாமல் இருந்த இந்தியா முதல்முறையாக ஆப்கானிஸ்தான் தலிபான் வெளியறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தாகியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசை இன்னும் அதிகாரப்பூர்வமாக இந்திய அரசு ஏற்கவில்லை. இருப்பினும் முதல்முறையாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சரிடம் அலுவல் ரீதியாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தொலைப்பேசி வாயிலாகப் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியா எங்களை தாக்கவில்லை.. பாக். குற்றச்சாட்டை மறுத்த ஆப்கானிஸ்தான் அரசு!!
காஷ்மீரில் பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலில் 26 பயணிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை தலிபான் ஆட்சியாளர்கள் கண்டித்தனர், இதைத் தொடர்ந்து தலிபான் அரசுக்கு இந்தியா இடம் கொடுத்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “தலிபான் வெளியுறவத்துறை அமைச்சர் மவுளவி அமீர் கான் முத்தாகியுடன் இன்று மாலை தொலைப்பேசி வாயிலாகப் பேசின்னே, சந்திப்பு திருப்திகரமாக இருந்தது. பஹல்காம் தாக்குதல் குறித்து தங்களின் ஆழ்ந்த வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் மக்களுடன் நமக்கிருக்கும் நட்புறவு, பாரம்பரிய உறவு, தொடர்ந்து அவர்களின் மேம்பாட்டுக்கு அளித்துவரும் ஆதரவு ஆகியவை குறித்தும் பேசினோம், இருதரப்பு கூட்டுறவையும் அடுத்தகட்டத்துக்கு செல்ல துணையாக இருப்போம். இந்தியா-ஆப்கானிஸ்தான் உறவில் பொய்யான, அடிப்படை ஆதாரமற்ற அறிக்கைகளை எதிர்க்கிறோம், புறக்கணிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே கடந்த மாதம் 27ம் தேதி இந்தியத் தூதர் ஆனந்த் பிரகாஷ், வெளியுறவுத்துறை அமைச்சர் முத்தகியை காபூல் நகரில் சந்தித்துப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி ஆப்கானின்தான் ஆட்சியை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றினர். அது முதல் ஆப்கானிஸ்தானுடன் எந்தவிதமான தூதரக உறவு இன்றி இந்தியா இருந்து வந்தது. இப்போதும்கூட இரு நாடுகளுக்கு இடையே தூதரக உறவு வரவில்லை என்றாலும், இந்தியாவின் நோக்கம் ஆப்கானிஸ்தான் மக்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்பதாகும்.

ஏனென்றால் ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சி அமலில் இருந்தபோது, அந்நாட்டில் ஏராளமான வளர்ச்சிப் பணிகளை இந்தியா செய்திருந்தது. தலிபான்களுடன் மத்திய அரசு பேச்சைத் தொடங்கிவிட்டதால், படிப்படியாக டெல்லி, மும்பை, ஹைதராபாத்தில் தூதரகங்களை அமைக்கவும் அனுமதித்துள்ளது. ஆப்கானிஸ்தான் மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் இந்தியாவுக்கு வந்து செல்லவும் இந்தியா அனுமதித்துள்ளது.
தலிபான் அரசின் வெளியுறவு விவகாரத்துறை இயக்குநர் ஹபிஸ் ஜியா அகமது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ இந்தியாவுக்கு அதிகமான ஆப்கானிஸ்தான் நோயாளிகள் வந்து செல்ல அதிகமான விசா வழங்கி உதவும்படி ஜெய்சங்கரிடம், அமைச்சர் முத்தாகி கேட்டுக்கொண்டார்.இந்திய சிறையில் இருக்கும் ஆப்கானிஸ்தான் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்” என்று தெரிவித்தார்.

கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் காபூல் நகருக்கு மூத்த இந்தியத் தூதர் ஜேபி சிங் சென்றிருந்தார். அப்போது பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த முகமது யாகூப் முஜாஹித்தை சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஹல்காம் தாக்குதலுக்குப்பின் பாகிஸ்தானுடன் அனைத்து விதமான ஏற்றுமதி, இறக்குமதி பொருட்களையும் மத்திய அரசு நிறுத்தியது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கு செல்ல வேண்டிய பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. இந்த சூழலை அறிந்த இந்திய அரசம், ஆப்கானிஸ்தானுக்கு விரைவாக பொருட்கள் சென்றடைய உதவுவதாகத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தலிபான் அரசை இந்தியா ஏற்றுக்கொண்டதா..? தலிபான் தலைவருடன் இந்தியப் பிரதிநிதி சந்திப்பு..!