திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் சேவூர் ராமசந்திரன். இவர் எம்.ஜி.ஆர் மீது கொண்ட பற்றின் காரணமாக அதிமுகவில் இணைந்து பங்காற்றியவர். அ.தி.மு.க. ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக செயல்பட்டுள்ளார். தற்போது ஆரணி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வாக சேவூர் ராமச்சந்திரன் இருந்து வருகிறார்.

இந்நிலையில், சேவூர் ராமச்சந்திரனின் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அவரின் மகன்களான விஜயகுமார், சந்தோர்குமார் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.