இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் திருத்தம் என்ற நடவடிக்கையில் இறங்கி உள்ளது. முதல்கட்டமாக பீகார் மாநிலத்தில் இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதன் முடிவில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது இந்திய அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. இதற்கிடையே ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
இந்த நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி, இதுகுறித்து வாய் திறப்பாரா? என்று திமுக அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பி இருந்தார். மேலும், தமிழ்நாட்டு வாக்காளர்களையும் டெல்லியில் அவர் அடமானம் வைக்க தயாராகிவிட்டாரா?. தமிழ்நாட்டில் குறுக்கு வழியில் வெற்றி பெற முடியாது என்றார். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, துரை முருகன் கேள்விக்கு பதிலடி கொடுத்துள்ளார். அப்போது திமுக தான் போலி வாக்காளர்களை கொண்டு கள்ள ஓட்டு போடுகிறது என விமர்சித்தார்.
மேலும் பேசுகையில்," திமுக தான் போலி வாக்காளர்களை சேர்க்க துடிக்கிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அண்மை காலங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட்ட நபரை பிடித்து கொடுத்தவா் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவார்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி வழக்கு.. இது முடியாது போலயே.. தமிழக அரசை விளாசிய சுப்ரீம்கோர்ட்..!!
திமுகவால் ஆர்.கே. நகர் தொகுதியில் 27,779 வாக்குகள் நீக்கப்பட்டது. மாநிலத்தில் உள்ள மதுக்கடைகளில் விற்பனை பிரதிநிதிகள், ஒவ்வொரு பாட்டிலுக்கும் அதிகாரப்பூர்வ விலைக்கு மேலாக ரூ.10 கூடுதல் வசூலித்து வருகிறார்கள். இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேட்டால், ‘மேலிடத்தின் உத்தரவின்படி இதை வசூலிக்கவேண்டும்’ என்று விற்பனையாளர் தெரிவிக்கிறார்கள். கலெக்சன், கமிஷன், கரேப்சனக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றார் அது ஸ்டாலின் அரசிற்கு தான் வழங்க வேண்டும்.
4ஆண்டுகளில் திமுக கொள்ளையடித்ததுதான் மிச்சம். டாஸ்மாக்கில் 4 ஆண்டுகளில் சுமார் 22 ஆயிரம் கோடி கொள்ளையடித்துள்ளார்கள். 10 ரூபாய் அமைச்சர் என்ற பெயரை பெற்றவர் செந்தில் பாலாஜி , 10 ரூபாய் அமைச்சர் யார் என சட்டமன்றத்தில் கேட்டால் செந்தில் பாலாஜி பெயரை தான் சொல்வார்கள் என கடுமையாக சாடினார்.
இதையும் படிங்க: டிரான்ஸ்பார்மர் கொள்முதல் வழக்கு.. செந்தில் பாலாஜிக்கு ஐகோர்ட் போட்ட உத்தரவு என்ன..?