சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி வனத்துறை நடவடிக்கை. இதனால் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடரப்பட்டது. இந்த வழக்கு 2022-ஆம் ஆண்டு முதலே நிலுவையில் இருந்து வந்தது. பின்னர் 2025 அக்டோபர் மாதத்தில் உயர்நீதிமன்றம் சட்டவிரோத ரிசார்ட்டுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
ஜனவரி தொடக்கத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் 42 சட்டவிரோத ரிசார்ட்டுகள் இருப்பதாகவும், அவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம், வனவிலங்குகளை பாதிக்கும் எந்த செயலும் அனுமதிக்கப்படாது என்று கண்டிப்புடன் கூறி, உடனடியாக அவற்றை அகற்றவும் சீல் வைக்கவும் உத்தரவிட்டது. நடவடிக்கை எடுக்கத் தவறினால் ஈரோடு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

2026-க்குள் ரிசார்ட் உரிமையாளர்கள் தங்கள் அனுமதி ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் எவரும் பதிலளிக்காததால், ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. வருவாய்த்துறை, வனத்துறை, காவல்துறை, மின்வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கொண்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டு, தலமலை, கேர்மாளம், ஆசனூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிய 42 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டது. சீல் வைக்கப்பட்ட இடங்களில் மூடல் அறிவிப்புகள் ஒட்டப்பட்டன.
இதையும் படிங்க: டிக் டிக் டிக்...! விழுப்புரம், பெரம்பலூர் நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர சோதனை..!!
இந்த நிலையில், சத்தியமங்கலம் வனப்பகுதியில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த 42 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
இதையும் படிங்க: மாணவி படுகொலையில் போலீசுக்கு அழுத்தம்... தவறான குற்றவாளிகள் சேர வாய்ப்பு..! கோர்ட் எச்சரிக்கை..!!