2026-27 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முக்கிய கூட்டத்தொடர், தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கையை முன்வைக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்தது.சென்னையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் காலை 10 மணிக்கு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றது.
நிதியமைச்சர் என். மரிய வில்சன் 2026-27 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை சபையில் தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். அப்போது பல்வேறு துறைகளுக்கு பட்ஜெட் ஒதுக்கீடு தொடர்பாக அறிவிக்கப்பட்டது. மேலும் முக்கிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு விவரங்களும் அறிவிக்கப்பட்டன. பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது கடன் வாங்கித் தான் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றும் வேறு வழியில்லை எனவும் தெரிவித்தார். நிதி பற்றாக்குறையை சரி செய்ய அமைக்கப்படும் ஐந்து நபர் குழு எப்படி கடன் வாங்குவது என யோசனை தருவார்கள் போல என்று விமர்சித்தார். திமுக ஆட்சியைப் போல் தமிழக வெற்றிக்கழக அரசும் கடன் வாங்கி தான் திட்டங்களை நிறைவேற்றுவார்கள் என்றும் வேறு வழியில்லை எனவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: கஜானா காலியா.? புதிய அறிவிப்புகளும், குற்றச்சாட்டுகளும்..!! பகீர் கிளப்பிய அமைச்சர் மரியவில்சன்..!
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என தமிழக அரசின் கடன் குறித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பல திட்டங்களுக்கு தமிழக வெற்றிக்கழக அரசு ஸ்டிக்கர் ஒட்டி பட்ஜெட்டில் வெளியிட்டுள்ளது என தெரிவித்துள்ளார். தாலிக்கு தங்கம் பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட அதிமுகவின் பல திட்டங்களை தமிழக வெற்றிக்கழக அரசு கொண்டு வந்திருப்பதாக கூறியுள்ளார். கடன் வாங்கி தான் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: வீடு, நதி, மின்சாரம்... பட்ஜெட்டில் விஜய் அரசின் Triple Attack..! சட்டசபையை கலக்கிய அதிரடி அறிவிப்புகள்..!!